கோவை மாவட்ட நாம் தமிழர்
கட்சி சார்பில் அந்த கட்சியில் புதிதாக
இணையும் தொண்டர்கள் அறிமுக கூட்டம் கோவையில் நடந்தது. கூட்டத்தில்
கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
கலந்து கொண்டு பேசினார்.
பின்னர்
அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
ஜெயலலிதாவின்
ஜாமீன் விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர், ‘’அ.தி.மு.க.
பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் வயது மற்றும் அவர்
வகித்த பதவியை கருத்தில் கொண்டு
அவருக்கு ஜாமீன் கிடைக்கும் என்று
நம்புகிறேன்’’என்று தெரிவித்தார்.
ஜெயலலிதா
தீர்ப்பு குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த்
கூறிவரும் விமர்சனம் குறித்த கேள்விக்கு,
‘’ அவரைப் பற்றி விமர்சிக்க விஜயகாந்துக்கு
அருகதை இல்லை. ஜெயலலிதாவின் தயவால்
ஓட்டுகள் பெற்று வெற்றிபெற்ற அவர்,
தனது எம்.எல்.ஏக்களை
ராஜினாமா செய்ய வைத்து விட்டு
விமர்சிக்கட்டும்’’என்று தெரிவித்தார்.
பெங்களூர் சிறையில் இருந்து தமிழக சிறைக்கு
ஜெயலலிதா மாற்றப்படுவாரா? என்ற கேள்விக்கு,
‘’ஜெயலலிதாவின் வழக்கை தமிழ்நாட்டுக்கு மாற்றும்
முயற்சி காலம் கடந்த முயற்சியாகும்’’
என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment