சிறை விதிமுறைப்படி ஜெயலலிதாவுக்கு ஊதுபத்தி உருட்டுவது, காய்கறி கட் செய்வது
போன்ற வேலைகள் ஒதுக்கப்பட்டிருந்தாலும், அவருக்கு அந்த
வேலைகளை அளிக்காமல் சிறை அதிகாரிகள் சிறப்பு
சலுகை அளிப்பதாக கூறப்படுகிறது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சிறையில் அடைக்கப்பட்டு, இன்று 14 நாட்களாகின்றன. முதல் ஒரு வாரத்திற்கு
அமைச்சர்கள், விஐபிகள் சிறையை நோக்கி வரிசையாக
அணிவகுத்தனர். ஆனால் யாரையும் பார்க்க
விருப்பமில்லை என்று ஜெயலலிதா கூறிவிட்டதால்,
அதன்பிறகு கூட்டம் குறைந்துவிட்டது.
முன்னாள்
அமைச்சர்கள் வருகை
முன்னாள்
அமைச்சர்கள் செங்கோட்டையன், பச்சைமால், முனுசாமி, எம்.பி., அசோக்
குமார், முன்னாள் சபாநாயகர் ஜெயகுமார் ஆகியோர், தினமும் சிறை வளாகத்தில்
ஆஜராகி வருகின்றனர். இது போன்று நேற்றும்
வந்திருந்தனர்.
சுதாகரன்
குடும்பம்
சிறையில்
அடைக்கப்பட்டுள்ள சுதாகரனை பார்ப்பதற்காக, அவரது மனைவி சத்யலட்சுமி,
மாமனார், மாமியார், உறவினர்கள் என, எட்டு பேர்
வந்திருந்தனர். அவர்கள் சுதாகரனை சந்தித்து
பேசியதாக தெரிகிறது. சுதாகரன், தினமும் சிறையிலுள்ள உணவையே
சாப்பிட்டு வருகிறார். நேற்று வந்திருந்த உறவினர்கள்,
அவருக்கு பழங்கள், பிஸ்கெட், பிரட் வாங்கி சென்றதாக
கூறப்படுகிறது. தனக்கு ஜாமீன் கிடைக்கவில்லை
என்று அவர் வருத்தத்தில் இருக்கிறாராம்.
ஊதுபத்தி,
காய்கறி நறுக்கல்
பொதுவாக,
தண்டனை கைதி ஒருவர், சிறையில்
அடைக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள், அவருக்கு
ஏதாவது வேலை கொடுக்க வேண்டும்
என்பது விதிமுறை. இதன்படி, ஜெயலலிதா, சசிகலா, இளவரசிக்கு, ஊதுபத்தி
உருட்டுவது, காய்கறி நறுக்குவது போன்ற
வேலை ஒதுக்கப்பட்டு உள்ளன. ஆனால் இதெல்லாம்
ஆவணத்தில் பராமரிப்பதற்காக ஒதுக்கப்பட்ட வேலைகள்தான். ஜெயலலிதாவின் செல்வாக்கை கருத்தில்கொண்டு, அவருக்கும், சசிகலா உள்ளிட்ட தோழிகளுக்கும்
இந்த வேலைகளை செய்ய சிறை
நிர்வாகம் அனுமதிக்கவில்லை என்று தெரிகிறது.
சிறை விதிகள் வளைப்பு
அதேபோல
சிறையில் வெள்ளை ஆடை உடுத்த
வேண்டும், வெளியில் இருந்து வரும் சாப்பாட்டை
அனுமதிக்க கூடாது என்பது போன்ற
விதிமுறைகளும் ஜெயலலிதாவுக்காக வளைக்கப்பட்டுள்ளன. ஆனால், இதை அதிகாரப்பூர்வமாக
சொல்ல முடியாது என்பதால், சிறை அதிகாரிகள் அவர்
சிறை உணவை மட்டுமே சாப்பிடுகிறார்
என்று தெரிவித்து வருகின்றனர். ஆனால் கர்நாடக மூத்த
அமைச்சர் ஒருவர், ஜெயலலிதா விரும்பும்
உணவை வெளியில் இருந்து எடுத்துச் செல்ல
அனுமதிக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
முதல்வர்
உத்தரவு
தமிழகம்,
கர்நாடகா இடையே பகை உணர்வு
ஊட்டிவிடப்பட்டுள்ளதால், ஜெயலலிதாவுக்கு தேவையான அனைத்து வசதிகளையும்
செய்து தருமாறு கர்நாடக முதல்வர்
சித்தராமையா சிறைத்துறைக்கு உத்தரவிட்டுள்ளதால் இதுபோன்ற விவிஐபி சலுகைகளை ஜெயலலிதா
உள்ளிட்டோர் அனுபவிப்பதாக தெரிகிறது.
No comments:
Post a Comment