தமிழகத்தில்
திராவிட கட்சிகளான தி.மு.க.,
மற்றும் அ.தி.மு.க., கட்சிகள் மீது
ஊழல் குற்றச்சாட்டு படிந்து, அதில், இரண்டு இயக்கங்களும்
சிக்கித் திணறிக் கொண்டு இருக்கின்றன.
இப்படி
இரண்டு திராவிட இயக்கங்களும், ஊழலில்
சிக்கித் தவிப்பதால், அவற்றின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருப்பதாகவும், அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாகவும், அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக
விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த வெற்றிடத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி,
வரும் 2016ம் ஆண்டு சட்டசபை
தேர்தலில், தமிழகத்தில் ஆட்சியை பிடித்துவிட வேண்டும்
என்ற முனைப்பில் பா.ஜ.,தீவிரமாக
இருக்கிறது.இதற்காக, அவர்கள் பல்வேறு முயற்சிகளை
எடுத்து வருகின்றனர். அதில் ஒரு முயற்சியாக,
தங்கள் தரப்புக்கு ஆதரவாக, நடிகர் ரஜினிகாந்தை
கொண்டு வந்து விட வேண்டும்
என்று, முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
மக்கள்
மத்தியில்...இதுகுறித்து, பா.ஜ., மூத்த
தலைவர் சுப்பிரமணியன் சாமி கூறியதாவது:தமிழகத்தில்,
ஊழலில் ஊறித் திளைத்த இரண்டு
இயக்கங்களை, தமிழக மக்களுக்கு அடையாளப்படுத்தியதில்
சந்தோஷமாக இருக்கிறேன். அந்த இரண்டு இயக்கங்களும்
விரைவில், மக்கள் மத்தியில் பலவீனப்பட்டுப்
போகும்.
தி.மு.க.,வைப்
பொறுத்த வரையில், அந்த இயக்கம், அஸ்தமனத்தை
நோக்கி பயணப்பட்டுக் கொண்டுஇருக்கிறது. அந்த இயக்கத்தை, இனிமேல்
யாரும் துாக்கி நிறுத்த முடியாது.
அதே நிலைமை தான், தற்போது
அ.தி.மு.க.,வுக்கும்.ஜெயலலிதா,
ஊழல் குற்றவாளி என, கோர்ட் மூலமே
நிரூபிக்கப்பட்டு விட்டது.
இதனால்,
அவரின் இமேஜ் முழுமையாக சரிந்து
விட்டது. தமிழகத்தைப் பொறுத்த வரையில், தேசிய
கட்சியான காங்கிரஸ், ஏற்கனவே செத்து விட்டது.
அதனால், தற்போது ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை
நிரப்பக் கூடிய ஒரே கட்சி,
பா.ஜ., தான்.
அதற்காக,
தமிழகத்தில் பா.ஜ.,வை
வேகமாக வளர்த்தெடுக்கும் முயற்சிகளில், அனைவரும் இறங்கி இருக்கின்றனர். இந்த
நல்ல வாய்ப்பை பயன்படுத்தி, தமிழகத்தில் பா.ஜ.,வை
ஆட்சி அரியணையில் ஏற்றிவிட வேண்டும் என நினைக்கின்றனர்; ஆசைப்படுகின்றனர்.
என் விருப்பமும் அது தான்.
தமிழகத்தில்
ஏற்கனவே, சினிமா கலாசாரத்தை ஒழித்து,
நேர்மையான, படித்த, ஒழுக்கமான மனிதர்
ஒருவர் தலைமையில் ஆட்சி ஏற்படுத்த வேண்டும்
என, நான் தொடர்ந்து வலியுறுத்தி
வருகிறேன்.
ஆனால்,
இன்றைய சூழ்நிலையில், தமிழக பா.ஜ.,வினர், வழக்கம் போல,
ரஜினியை அந்த இடத்தில் வைத்துவிட
வேண்டும் என துடிக்கின்றனர்.எனக்கு
தெரிந்த வரையில், ரஜினி நல்ல மனிதர்
தான்; என் மீதும் மரியாதை
உள்ளவர் தான். ஆனால், அரசியலில்
இறங்கி, அரசியல் கலாசாரத்தோடு ஒன்றி,
அவரால் செயல்பட முடியுமா என,
எனக்கு தெரியவில்லை.
கிராம அளவில்...தமிழக பா.ஜ.,வினருக்கு இப்போதும் நான் சொல்வதெல்லாம், சினிமாக்காரர்களை
தேடிச் செல்வதை விட்டுவிட்டு, பா.ஜ.,வை மக்கள்
மத்தியில் வேகமாக கொண்டு செல்வதற்கான
ஏற்பாட்டை செய்யுங்கள்; கட்சியை கிராம அளவில்
கட்டமைக்க ஏற்பாடுகளை செய்யுங்கள்.
மற்றபடி,
ரஜினியின் ஆதரவு பா.ஜ.,வுக்கு தேவையா, அவரை
அரசியல் களத்துக்கு கொண்டு வந்து தான்
ஆக வேண்டுமா என்பது குறித்தெல்லாம், இப்போதைக்கு
எதுவும் சொல்ல முடியாது. அது,
தமிழக பா.ஜ., கையில்
இல்லை. கட்சியின் தேசிய செயற்குழு தான்,
அதற்கான முடிவை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
URUPPADIYAANA. ORAY. PATHIVU
ReplyDelete