பரப்பன அக்ரஹாரா சிறையில்
அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்றுவதற்கான
வாய்ப்புகள் உடனடியாக இல்லை என்று சிறைத்துறை
டி.ஐ.ஜி ஜெய்சிம்ஹா
தெரிவித்துள்ளார்.இது குறித்து செய்தியாளருக்கு
நேற்று பேட்டியளித்த சிறைத்துறை டி.ஐ.ஜி
ஜெய்சிம்ஹா கூறியதாவது:சிறையில் ஜெயலலிதாவிற்கு வேலைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறுவதில்
உண்மையில்லை. இதுவரை ஜெயலலிதா உள்பட
4 பேருக்கும் எந்த வேலையும் ஒதுக்கப்படவில்லை.
இவர்கள் அனைவரும் நீண்ட நாள் கைதிகள்
இல்லை. நீண்ட நாள் கைதிகளுக்குத்தான்
வேலைகள் கட்டாயம். குறைந்த கால சிறை
தண்டணை என்பதால் விருப்பம் இருந்தால் அவர்கள் வேலை செய்யலாம்.
இல்லையென்றால் செய்யத் தேவையில்லை. வழக்கமான
நடை பயிற்சி, செய்தித்தாள் வாசிப்பு, சிறை உணவுகளையே எடுத்து
வருகிறார். சிறைக்கு வரும் அமைச்சர்களை, ஜெயலலிதா
சந்திக்க விரும்புவதில்லை. அவரது தோழி சசிகலாதான்
சந்தித்து பேசி வருகிறார்.
ஜெயலலிதாவை
தமிழக சிறைக்கு மாற்றப் போவதாக வதந்திகள்
பரவி வருகிறது. இதை யாரும் நம்பத்
தேவையில்லை. கர்நாடக சிறைத்துறை சட்டம்
501வது பிரிவின்கீழ் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு, சிறையில்
அடைக்கப்பட்டுவிட்டால், அதே சிறையில்தான் தண்டணை
காலத்தை கழிக்க வேண்டும். வேறு
சிறைக்கு மாற்றுவது என்பது அந்த சட்டத்தில்
இடமில்லை. இதனால் ஜெயலலிதாவை தமிழக
சிறைக்கு மாற்றம் செய்யும் வாய்ப்புகள்
உடனடியாக இல்லை.இந்த சட்டம்
மற்றும் சிறை மாற்றம் இல்லை
என்பதை ஜெயலலிதா நன்கு அறிந்திருக்கிறார். இதனால்
சிகிச்சைக்கோ, உணவு சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கோ
அவர் மறுப்பு தெரிவிப்பது இல்லை.
அனைத்திலும் சிறை துறை அதிகாரிகளுக்கு
முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். அவரது உடல் நிலையை
பற்றி யாரும் கவலைப்பட தேவையில்லை.
அவர் நலமாக இருக்கிறார். தினமும்
அவரை காலை, மாலையில் ஒரு
டாக்டர், 3 நர்சுகள் பரிசோதனை செய்து வருகின்றனர் என்றார்.
No comments:
Post a Comment