கத்தி படத்திற்குப் பிறகு சிம்புதேவன் இயக்கத்தில்
நடிக்கவிருக்கிறார் விஜய். இப்படத்தில் விஜய்க்கு
ஜோடியாக ஸ்ருதிஹாசனும், ஹன்சிகா மோத்வானியும் நடிக்கின்றனர்.
இப்படத்தில்
விஜய் தந்தை-மகன் என
இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார். மற்றும்
நான் ஈ புகழ் சுதீப்,
நடிகை ஸ்ரீதேவி, தம்பி ராமையா ஆகியோர்
முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத்
இசையமைக்கிறார். இப்படத்தை விஜய்யின் பி.ஆர்.ஓ.வான பி.டி.செல்வகுமாரும், தமிழ்ப்படங்களை கேரளாவில் வெளியிடும் விநியோகஸ்தரான தமீன் ரிலீஸ் நிறுவனத்தின்
ஷிபுவும் இணைந்து தயாரிக்கிறார்கள்.
100 கோடி
ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்மாக படம் தயாராகவிருக்கிறது. படப்பிடிப்பு
அடுத்த மாதம் தொடங்கி தொடர்ந்து
நடைபெற இருக்கிறது. இந்நிலையில் விஜய் நடிக்கும் புதிய
படத்தின் தலைப்பு குறித்து ஒரு
தகவல் கசிந்துள்ளது. சிம்புதேவன் என்றாலே சரித்திர கதைகளுக்கு
பெயர் பெற்றவர் என்று நமக்கு தெரியும்.
இப்படமும்
அதே கதையம்சம் கொண்டுள்ளதால், படத்தின் டைட்டில் பெரும்பாலும் ‘மாரீசன்’ என்றே இருக்கும் என
நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. 2011ல் தனுஷை வைத்து
இயக்கவிருந்த படத்திற்காக மாரீசன் என்ற இந்த
டைட்டிலை பதிவு செய்து வைத்திருந்தார்
சிம்புதேவன். அதை தற்போது பயன்படுத்த
இருக்கிறாராம்.
No comments:
Post a Comment