Tuesday, October 21, 2014

அஜீத்தின் தல 55 படத்தில் கமல்

கௌதம் இயக்கத்தில் அஜீத் நடித்துவரும் படத்திற்கு கமல் வாய்ஸ் தருகிறார் என உறுதி செய்யப்படாத தகவல் ஒன்று உலவுகிறது.

வேட்டையாடு விளையாடு படத்திற்குப் பிறகு கமலின் குட் புக்கில் கௌதமும் இடம்பிடித்தவர் கௌதம். கௌதமை பொறுத்தவரை கமல் அவருக்கு கிட்டத்தட்ட குரு மாதிரி. கமலின் சத்யா முதலான படங்களுக்கு கௌதம் பரம ரசிகர்.

அஜீத் நடிக்கும் படத்தில் காட்சியை, கதாபாத்திரத்தை வாய்ஸ் ஒவரில் விவரிக்க கமல் குரல் தந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறார் கௌதம். அவர் கேட்டால் கமலும் மறுக்க மாட்டார். ஆனால் அஜீத் அதற்கு ஒத்துக் கொள்வாரா?

அஜீத் பற்றி கமலும், கமல் பற்றி அஜீத்தும் இதுவரை எவ்வித கருத்தும் கூறியதில்லை. கிட்டத்தட்ட மௌன விரோதிகள் போலதான் இருவரும். கமல் கௌதமின் விருப்பத்துக்கு சம்மதித்தாலும் அஜீத் ஒத்துக் கொள்வாரா?


அஜீத்தின் உல்லாசம் படத்தில் அவருக்காக கமல் ஒரு பாடல் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment