ஆர்ப்பாட்டமில்லாமல்
மாஸ் படத்தை அறிவித்து படப்பிடிப்பையும்
நடத்தி வருகிறார் வெங்கட்பிரபு. சூர்யா நடிப்பில் ஞானவேல்ராஜா
தயாரிக்கும் இந்தப் படத்தில் சூர்யாவின்
வித்தியாசமான டெரர் கெட்டப்பை தீபாவளியை
முன்னிட்டு வெளியிட்டுள்ளனர்.
மாஸ் படம் ஹாரர் வகைமாதிரியைச்
சேர்ந்தது. வெங்கட்பிரபு இதுவரை இயக்கிய படங்களிலிருந்து
முற்றிலும் வித்தியாசமாக இந்தப் படம் தயாராகி
வருகிறது. யுவன் இசையமைக்க ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு
செய்கிறார். வழக்கம் போல பிரேம்ஜி
அமரனும் படத்தில் இருக்கிறார்.
படப்பிடிப்பு
விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில்
சூர்யாவின் வித்தியாசமான கெட்டப்பை வெளியிட்டுள்ளனர். சூர்யாவா இது என்று கேட்கும்வகையில்
உள்ளது அவரது கெட்டப்.
2015 கோடை
ஸ்பெஷலாக மாஸ் திரைக்கு வருகிறது.

No comments:
Post a Comment