மேலே தலைப்பாக சொன்னதைத்தான், ஆந்திர மீடியாக்கள் கடந்த
சில நாட்களாக பெரிது படுத்தி வருகின்றன.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணம், விஜய
நகரம், ஸ்ரீகாகுளம் ஆகியப் பகுதிகள் 'ஹூட்
ஹூட்' புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அதற்கான பல தெலுங்கு நடிகர்கள்,
தமிழ் நடிகர்கள் பலரும் லட்சக் கணக்கான
ரூபாயை நன்கொடையாக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கி
வருகிறார்கள். தெலுங்கு மீடியாக்கள் யார் வழங்கினார்கள், யார்
வழங்கவில்லை என்பதைச் செய்தியாகவும் வெளியிட்டு வருகின்றன. சில நடிகைகள் இதுவரை
எந்த நன்கொடை வழங்காததையும் அவை
சுட்டிக் காட்டி வருகின்றன.
அதே போல் தமிழ்நாட்டின் சூப்பர்
ஸ்டார் ரஜினிகாந்த் கூட இதுவரை எந்த
நன்கொடையையும் வழங்காததை அவை செய்தியாக வெளியிடுகின்றன.
ரஜினிகாந் மீது ஆந்திர தெலுங்கு
மக்களும் தமிழக மக்களைப் போலவே
பாசத்தை வைத்து அவருடைய படங்களை
தொடர்ந்து ரசித்து, வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். ஆந்திர மக்கள் மீதான
மரியாதையை ரஜினிகாந்த் வெளிப்படுத்த வேண்டிய நேரமிது. அவரை
நாங்கள் குறை சொல்லவில்லை. ஆந்திர
மக்கள் அவர் மீது எவ்வளவு
அபிமானம் வைத்திருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறோம், அவ்வளவே
என்கிறார்கள்.
சுமார்
10 வருடங்களுக்கு முன் சென்னை, உள்ளிட்ட
கடலோரப் பகுதிகள் சுனாமியால் பெரிதும் பாதிக்கப்பட்ட போது தெலுங்கு நடிகரான
சிரஞ்சீவி 10 லட்ச ரூபாய் கொடுத்து
உதவி செய்தார். அதற்கு தமிழக மக்களும்
அவருக்கு நன்றி தெரிவித்திருந்தார்கள். தற்போது ஆந்திர
மக்களுக்கு ரஜினிகாந்த் உதவி செய்தால், அவர்
அவர்கள் மனதிலும் இடம் பிடித்து விடுவார்.
சூர்யா, விஷால் போன்று ரஜினிகாந்தும்
உதவி செய்வாரா என அவர்கள் எதிர்பார்ப்பதாகவும்
செய்திகளை வெளியிட்டுள்ளார்கள்.
ஒருவேளை
மீடியாக்களுக்கு தெரியப்படுத்தாமல் ரஜினிகாந்த் உதவி செய்திருந்தால், அதை
நாங்கள் வரவேற்கிறோம் என்றும் கூறியிருக்கிறார்கள்.
No comments:
Post a Comment