பெங்களூ
பரப்பன அஹ்ரகாரா சிறையில் இருந்து அதிமுக பொதுச்செயலாளர்
ஜெயலலிதா வெளியில் வந்தார்.
சொத்து
குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு
ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு
நேற்று உத்தரவு பிறப்பித்தது. இன்று
காலை நீதிபதி
குன்ஹாவிடம் ஜாமீன்
உத்தரவு வழங்கபட்டது. ஜெயலலிதாவுக்காக
பரத் மற்றும் குணஜோதி ஆகிய
இருவர் பிணையம் அளித்தனர்.
இதன்பிறகு
ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் பிணையம் அளித்தவர்களிடமிருந்து ரூ.1 கோடி
பாண்ட் எழுதி வாங்கிக்கொண்டு ஜாமீனில்
விடுதலை செய்ய அனுமதிக்குமாறு கோர்ட்
ரிஜிஸ்டருக்கு குன்ஹா உத்தரவிட்டார். மேலும்,
ஜெயலலிதா உள்பட 4 பேரிடம் இருந்து
, தலா ரூ.1 கோடி பாண்ட்
எழுதி வாங்கிக்கொள்ள வேண்டும் என்றும் ஜெயில் அதிகாரிக்கு
நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதை தொடர்ந்து ஜாமீன் நடை முறை
முடிந்த பின் ஜெயலலிதா உள்பட
4 பேரையும் ஜாமீன்ல் விடுதலை செய்ய நீதிபதி
குன்ஹா அதிகாரபூர்வமாக உத்தரவிட்டார். இதை தொடர்ந்து. இந்த
உத்தரவு சிறை துறை அதிகாரிகளிடம்
சமர்பிக்கப்பட்டது. இதையடுத்து ஜெயலலிதா
சிறையில் இருந்து வெளியே வந்தார்.
வழி நெடுகிலும் கூடி இருந்த தொண்டர்களை
பார்த்து கும்பிட்ட படி ஜெயலலிதா காரில்
சென்றார்.பெங்களூரில் இருந்து தனி விமானம்
மூலம் சென்னைக்கு ஜெயலலிதா வருகிறார்.
No comments:
Post a Comment