Saturday, October 18, 2014

வாட்ஸ் அப்பில் சூப்பர் ஸ்டார் பட பாடல் வெளியீடு

மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் வர்ஷம் படத்தின் ஒரு பாடல் வாட்ஸ் அப்பில் வெளியாகிறது. ரஞ்சித் ஷங்கர் இயக்கத்தில் மம்மூட்டி, மம்தா மோகன்தாஸ், ஆஷா சரத் நடிக்கும் படம், வர்ஷம். பிஜி பால் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது. இதில் இடம்பெறும், ‘கூடு தேடி...’ என்று தொடங்கும் பாடலை வாட்ஸ் அப்பில் வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளது.   மம்மூட்டியின் முகப்புத்தகத்தில் இந்தப் படம் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் சிறப்பாக கருத்து சொல்லியிருக்கிற பத்துபேரை தேர்வு செய்து, அவர்களுக்கு மம்மூட்டி வாட்ஸ் அப்பில் பாடல்களை அனுப்புகிறார். இதில் வெளியான மூன்று மணி நேரத்துக்குப் பிறகு அந்தப் பாடல் யூ டியூபில் வெளியிடப்படுகிறது.இதே போல ஏற்கனவே ‘அலெக்ஸ் என்ற கன்னட படத்தின் பாடல்கள், வாட்ஸ் அப் மூலம் வெளியிடப்பட்ட்டுள்ளது. 

No comments:

Post a Comment