வெஸ்ட்
இண்டீசுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில்
127 ரன்கள் விளாசிய விராட் கோலிக்கு
இது 20–வது செஞ்சுரியாகும். இதன்
மூலம் ஒரு நாள் கிரிக்கெட்
போட்டியில் அதிக சதங்கள் விளாசியவர்களின்
பட்டியலில் வெஸ்ட் இண்டீசின் பிரையன்
லாரா, இலங்கையின் சங்கக்கரா (தலா 19 சதம்) ஆகியோரை
முந்திய கோலி, பாகிஸ்தானின் சயீத்
அன்வருடன் (20 சதம்) 7–வது இடத்தை
பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதிக சதப் பட்டியலில் முதல்
6 இடங்களில் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர் (49 சதம்),
ஆஸ்திரேலியாவின் ரிக்கிபாண்டிங் (30 சதம்), இலங்கையின் ஜெயசூர்யா
(28 சதம்), இந்தியாவின் சவுரவ் கங்குலி (22 சதம்),
வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் (21 சதம்),
தென்ஆப்பிரிக்காவின் கிப்ஸ் (21 சதம்) ஆகியோர் உள்ளனர்.
25 வயதான
விராட் கோலி இதுவரை 141 ஒரு
நாள் போட்டிகளில் 5,879 ரன்கள் (சராசரி 51.57) எடுத்துள்ளார்.
No comments:
Post a Comment