நாசிக்
மாவட்டத்தில் குறிப்பிட்ட வேட்பாளருக்கு வாக்களிக்காத மூதாட்டியை தீ வைத்து எரித்த
3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தீ வைத்து எரிப்பு
நாசிக்
மாவட்டம் யோலே சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
பாபுல்காவ் பகுதியை சேர்ந்த 65 வயது
மூதாட்டி சந்துபாய் வாபலே. இவர் நேற்று
முன்தினம் மாலை தனது வீட்டில்
இருந்தார். அப்போது அசோக் பர்னரே,
அவரது சகோதரர் பாண்டூரங் மற்றும்
நந்துகிஷோர் ஆகியோர் அங்கு வந்தனர்.
குறிப்பிட்ட வேட்பாளரின் ஆதரவாளர்களான இவர்கள், மூதாட்டியிடம் சென்று ‘சட்டசபை தேர்தலில்
யாருக்கு வாக்களித்தீர்கள்?’ என்று கேட்டனர். இதற்கு
அந்த மூதாட்டி பதிலளித்ததாக தெரிகிறது. அவரது பதிலால் திருப்தி
அடையாத அவர்கள், அந்த மூதாட்டி மீது
மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து
எரித்தனர்.
உயிருக்கு
போராட்டம்
உடலில்
80 சதவீத தீ காயங்களுடன் அந்த
மூதாட்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகிறார். அவர்
டாக்டர்களிடம் அளித்த வாக்குமூலத்தில், ‘2–ம்
எண் கொண்ட வேட்பாளருக்கு நான்
வாக்களிக்காததால் அவர்கள் என்னை தீ
வைத்து எரித்ததாக கூறினார்.
அவரை தீ வைத்து எரித்த
3 பேரையும் போலீசார் கைது செய்தனர். யோலே
தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் சகன்புஜ்பால் முன்னணி வேட்பாளர் ஆவார்.
எனினும், 2–ம் எண் எந்த
வேட்பாளருடையது என்று தெரியவில்லை என
போலீசார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment