நடிகர்
ரஜினியை பா.ஜ., பக்கம்
இழுக்க, தீவிர பேச்சு வார்த்தைகள்
நடந்து வந்த நிலையில், அவர்
ஜெயலலிதாவிற்கு வாழ்த்து தெரிவித்து, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இதன்மூலம், கூட்டணி 'ரூட் கிளியர்' ஆனதால்,
விஜயகாந்த் நிம்மதி அடைந்துள்ளார்.
கட்சி படுதோல்வி:
கடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுடன் கூட்டணி
அமைத்து, தே.மு.தி.க., போட்டியிட்டது. ஆனாலும்,
கட்சி படுதோல்வியை சந்தித்தது. இருந்தபோதும், பா.ஜ., கூட்டணியில்
தொடர்வதை, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்
விரும்புகிறார்.கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அவ்வப்போது,
பா.ஜ., அரசு நடவடிக்கைகளை
விமர்சித்து வந்தாலும், விஜயகாந்த் அப்படி எதுவும் செய்வதில்லை.
பா.ஜ., அரசு மீது,
தனக்கு அதிருப்தி இருந்தாலும், அவர் அதுகுறித்து வாய்
திறப்பதில்லை.வரும் 2016ம் ஆண்டு சட்டசபைத்
தேர்தலில், பா.ஜ., தலைமையிலான
கூட்டணி யின், முதல்வர் வேட்பாளராக
களமிறங்க வேண்டும் என, விஜயகாந்த் கணக்கு
போடுகிறார். ஆனால், எப்படியாவது நடிகர்
ரஜினியை இழுத்து, அவரை சட்டசபைத் தேர்தலுக்கு
முன்னிலைப்படுத்த வேண்டும் என, பா.ஜ.,வினர் விரும்புகின்றனர். இதற்காக,
ரஜினிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
ஆனால், ரஜினி தரப்பில் இருந்து,
இதுவரை எந்தவிதமான சிக்னலும் இல்லை.
கடும் அதிருப்தி:
இதற்கிடையில்,
சிறையில் இருந்த ஜெயலலிதா, இடைக்கால
ஜாமினில் வெளியே வந்திருக்கிறார்.இதற்கு,
நடிகர் ரஜினி வாழ்த்து கடிதம்
அனுப்பி இருக்கிறார்; ஜெயலலிதாவும் நன்றி கடிதம் அனுப்பியிருக்கிறார்.இது பா.ஜ.,
தரப்பில், ரஜினி மீது கடும்
அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.'கட்சி தமிழகத்தில், அ.தி.மு.க.,வுக்கு எதிர்ப்பாக செயல்பட்டு
கொண்டிருக்கும் நிலையில், பா.ஜ.,வுக்கு
ஆதரவான நிலைப்பாட்டில் இருப்பதாக காட்டிக் கொண்டிருக்கும் ரஜினி, வழக்கம்போல, இரட்டை
குதிரை சவாரி செய்யப் பார்க்கிறார்.
தன் புதிய படம் 'லிங்கா'
பிரச்னையில்லாமல், விற்பனையாக வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறார்'
என, சொல்லி, பா.ஜ.,வினர் அதிருப்தியாகி இருக்கின்றனர்.ஆனால், அதற்கு நேர்மாறாக,
விஜயகாந்த், ரஜினியின் கடிதத்துக்குப் பின், சந்தோஷமாகி இருப்பதாக
கூறப்படுகிறது.
இதுகுறித்து,
தே.மு.தி.க.,
வட்டாரத்தில் கூறியதாவது:
ஊழலுக்கு எதிரான போராட்டக் களத்தில்,
ரஜினி, பா.ஜ., பக்கம்
நிற்பார் என, கணக்கு போட்டனர்.
ஆனால், ஜெயலலிதாவிற்கு வாழ்த்து தெரிவித்து, அந்த நம்பிக்கையை ரஜினி
தகர்த்து விட்டார். இதனால், ரஜினி பின்னால்
பா.ஜ., செல்ல முடியாத
நிலை உருவாகி விட்டது.ஆக,
பா.ஜ., தமிழகத்தில், விஜயகாந்தை
மையமாக வைத்து தான், அடுத்த
சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்ள முடியும்.இதனால், விஜயகாந்த் மகிழ்ச்சி
அடைந்து உள்ளார். கட்சியினரும் உற்சாகமாகி இருக்கின்றனர்.இவ்வாறு, அந்த வட்டாரத்தில் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment