தீபாவளியன்று
சொல்லாமல் கொள்ளாமல் திடீரென ரஜினியின் வீட்டுக்குப்
படையெடுத்தனர் நூற்றுக்கணக்கான ரசிகர்கள்.
விஷயத்தைக்
கேள்விப்பட்ட ரஜினி, உடனே ஒரு
மேடை அமைக்கச் சொல்லி, அதன் மீது
நின்றபடி அனைத்து ரசிகர்களுக்கும் தீபாவளி
வாழ்த்துச் சொல்லி அனுப்பினார். இந்த
திடீர் சந்திப்பால் அவரது ரசிகர்கள் உற்சாகத்துடன்
வீடு திரும்பினர்.
முன்பெல்லாம்
தனது ரசிகர்களை வாரா வாரம் வீட்டில்
சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தார் ரஜினி. அரசியல் சூழல்
காரணமாக 90களில் இந்த சந்திப்பை
தவிர்க்க ஆரம்பித்தார். மன்றங்கள் பதிவு செய்வதையும் நிறுத்தி
வைத்தார்.
இருந்தாலும்
கிடைக்கிற சந்தர்ப்பங்களில் அவர் தன் ரசிகர்களைச்
சந்திப்பதை வழக்கமாக வைத்துள்ளார். சந்திப்பு கடந்த 12.12.12 அன்று தனது ரசிகர்களை
போயஸ் கார்டனில் சந்தித்தார் ரஜினி. பின்னர் அதே
நாளில் ரசிகர்கள் ஏற்பாடு செய்த கூட்டத்துக்கும்
வந்து ரசிகர்களை மகிழ்வித்தார்.
அதன்பிறகு
அவ்வப்போது ரசிகர்களை ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்து வந்தார். திடீர் வருகை இந்த
தீபாவளியையொட்டி ஏராளமான ரசிகர்கள் அவரைச்
சந்திக்க திடீரென அவரது வீட்டின்
முன் குவிந்தனர். ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர்
திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வெளியூர்களில்
இருந்தும் ஏராளமான ரசிகர்கள் வேன்,
கார்களில் வந்திருந்தனர்.
போலீசாரும்
பாதுகாவலர்களும் கூட்டத்தினரை தடுப்பு வளையம் அமைத்து
கட்டுப்படுத்தினர். தலைவரைச் சந்திக்காமல் செல்ல மாட்டோம் தீபாவளிக்கு
தலைவரைப் பார்க்க வந்து இருக்கிறோம்.
அவரைச் சந்திக்காமல் செல்லமாட்டோம் என்று கூட்டத்தினர் குரல்
எழுப்பினர்.
இதுகுறித்த
தகவல் வீட்டுக்குள் இருந்த ரஜினிக்கு தெரிவிக்கப்பட்டது.
வேகமாய் வந்த ரஜினி உடனே
தான் சந்திக்க வருவதாகக் கூறிய ரஜினி, வீட்டு
முன் சிறிய மேடை அமைக்கச்
சொன்னார்.
சில நிமிடங்களில் அந்த வேலை முடிய,
மின்னல் வேகத்தில் வந்து நின்றார் ரஜினி.
மேடையில் ஏறி ரசிகர்களைப் பார்த்து
கை அசைத்தார். உற்சாகம் ரஜினியை கண்டதும் ரசிகர்கள்
உற்சாகமானார்கள். தலைவா என உரக்க
குரல் எழுப்பினர். எல்லோருக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள்
என்றார் ரஜினி. பத்திரமா போங்க
பதிலுக்கு ரசிகர்களும் தீபாவளி வாழ்த்து கூறினார்கள்.
சிறிது
நேரம் அங்கு நின்று ரசிகர்களைச்
சந்தித்து விட்டு, அனைவரும் பத்திரமாக
வீடு திரும்புங்கள், பாதுகாப்பாக தீபாவளி கொண்டாடுங்கள் என்று
கூறிவிட்டு ரசிகர்களிடம் விடைப் பெர்றார். பிறகு
ரசிகர்கள் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.
No comments:
Post a Comment