ஈராக் நாட்டில் கட்டப்பட்ட அணு உலைகளின் மீது
கடந்த 1981ம் ஆண்டு இஸ்ரேல்
விமானங்கள் தாக்குதல் நடத்தின. இத்தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் மினாசெம்
பெகினை முன்னாள் ஈராக் அதிபர் சதாம்
உசேன் கடத்த திட்டமிட்டார் என்று
தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் ஈராக்
அதிபர் சதாம் உசேன் கடந்த
1981ம் ஆண்டு ஆட்சி பொறுப்பில்
இருந்தார். அப்போது சதாம் உசேன்
பாலஸ்தீனத்துக்கு ஆதரவான செயல்களில் ஈடுபட்டார்,
இதற்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு
தெரிவித்தது. அத்துடன், 1981ம் ஆண்டு ஜூன்
மாதம் ஈராக்கில் கட்டப்பட்டு வந்த அணு உலைகளின்மீது
இஸ்ரேல் ராணுவம், விமான தாக்குதல் நடத்தியது.
இத்தாக்குதலை
கண்டித்து இஸ்ரேல் பிரதமர் மினாசெம்
பெகினை கடத்தி, ஈராக் தலைநகர்
பாக்தாத் நகருக்கு கொண்டு வருவது குறித்து
சதாம் உசேன் ராணுவ அதிகாரிகளுடன்
திட்டமிட்டார். பின்னர் மேற்கத்திய நாட்டின்
தலைவர் ஒருவரது வற்புறுத்தலின்பேரில் இஸ்ரேல் பிரதமரை
கடத்தும் திட்டத்தை கைவிட்டார் என்று சதாம் உசேனின்
வழக்கறிஞர் பாடி அரேப் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் அரேபிய பத்திரிகையில்
வெளியாகி உள்ளது. சர்வாதிகாரி சதாம்
உசேன் நினைவலைகள் குறித்த புத்தகம் அடுத்த
வாரம் வெளியாக உள்ள நிலையில்
இந்த தகவல் வெளியாகி உள்ளது
பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
No comments:
Post a Comment