Sunday, October 19, 2014

கத்தி பாடல் சிடியை இலவசமாகத் தரும் லைகா!

வெளிநாட்டு கடைகளில் கத்தி படத்தின் பாடல் சிடிகளை இலவசமாகவே வழங்கி வருகிறதாம் லைகா நிறுவனம்

தீபாவளி வெளியீடாக வருகிறது கத்தி படம். லைகா நிறுவனம் இலங்கை அதிபருக்கு நெருக்கமான நிறுவனம் என்று கூறி இந்தப் படத்துக்கு தமிழகத்தில் எதிர்ப்பு நிலவுகிறது

ஆனால் வெளிநாடுகளில் இந்த நிலை இல்லை. விஜய் படத்துக்கு இதுவரை இல்லாத எண்ணிக்கையிலான அரங்குகளில் கத்தியை வெளியிடவிருக்கிறது லைகா நிறுவனம்

இந்த நிலையில், படத்தின் இசைத்தட்டுகளை (சிடி) தமிழர் அதிகம் வசிக்கும் வெளிநாடுகளில் இலவசமாகவே வழங்கி வருகிறது லைகா நிறுவனம். சூப்பர் மார்க்கெட்டுகள், இசைத் தட்டு விற்பனை நிலையங்களில் வாங்கும் பொருட்களுடன் இந்த சிடியை இலவசமாகக் கொடுக்கிறார்களாம்.


No comments:

Post a Comment