செயற்கை
நுண்ணறிவு பெற்ற ரோபோக்களால் மனித
குலத்திற்கு பெரும் ஆபத்து ஏற்படலாம்
என்ற செய்தி வெளியாகியுள்ளது.
சினிமாக்களில்
மட்டுமல்ல நிஜ வாழ்விலும் இயந்திர
மனிதனால் மனித குலத்துக்கு பெரும்
ஆபத்து ஏற்படும் என ஸ்பேஸ் எக்ஸ்
நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி
எலன் ரீவ் மஸ்க் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டு
"எந்திரன்" முதல் "டிரான்ஸ்பார்மர்" வரையில் செயற்கை நுண்ணறிவு
பெற்ற ரோபோக்களால் ஏற்படும் ஆபத்துக்கள் நிஜ வாழ்க்கையிலும் ஏற்படும்
அபாயம் ஏற்பட்டுள்ளது.
ரோபோக்களின்
இண்டலிஜென்ஸ்:
ரோபோக்களுக்கான
ஆர்ட்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் என்ற "செயற்கை நுண்ணறிவு" பற்றிய
கேள்விகளுக்கு மஸ்க் பதிலளித்தபோது அவர்
இவ்வாறு கூறினார்.
செயற்கை
நுண்ணறிவு முயற்சி:
சமீப காலமாக ரோபோக்களுக்கு செயற்கை
நுண்ணறிவை வழங்க விஞ்ஞானிகள் கடும்
முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.
விரைவில்
சாத்தியமாகும்:
இதனால்
ஏற்பட இருக்கும் பின்விளைவுகள் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை
தொடர்ச்சியான முயற்சிகளினால் ரோபோக்களுக்கு செயற்கை நுண்ணறிவை வழங்கும்
முறை சாத்தியமாகும்.
மனித குலத்தின் அழிவு:
அந்த நாள் மனித குலத்தின்
அழிவிற்கு ஆரம்பமாக இருக்கும். ரோபோக்கள் செயற்கை நுண்ணறிவின் மூலம்
எளிதாக சுய முன்னேற்றத்தை ஏற்படுத்தி
கொள்ளும்.
அணு ஆயுதத்தை விடக் கொடுமை:
பின்னர்
அதன் விளைவுகள் அணு ஆயுதத்தை விட
கொடுமையானதாக இருக்கும்" என்று அவர் கூறியுள்ளார்.ஏற்கெனவே இது குறித்து அவர்
எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment