பாபநாசம்
படப்பிடிப்பின்போது தான் காயம் அடைந்ததாக
வந்த செய்தியில் உண்மை இல்லை என்று
உலக நாயகன் கமல் ஹாஸன்
தெரிவித்துள்ளார். மலையாளத்தில் மோகன்லால், மீனா நடித்த சூப்பர்
ஹிட் படமான த்ரிஷ்யத்தின் தமிழ்
ரீமேக்கான பாபநாசம் படத்தில் கமல் ஹாஸன், கௌதமி
ஆகியோர் நடித்து வருகிறார்கள். படத்தின்
முதற்கட்ட படப்பிடிப்பு நெல்லை பகுதியில் நடந்தது.
இதையடுத்து தற்போது இரண்டாம்கட்ட படப்பிடிப்பு
கேரளாவில் நடந்து வருகிறது. இந்நிலையில்
படப்பிடிப்பில் விபரீதம் நடந்ததாக செய்திகள் வெளியாகின.
காயம்
கலாபவன்
மணி கமல் ஹாஸனை தாக்கும்
காட்சி படமாக்கப்பட்டபோது அவர் கமலின் முகத்தில்
ஓங்கி குத்தியதில் காயம் ஏற்பட்டதுடன் மூக்கில்
இருந்த ரப்பர் உள்ளே சென்றுவிட்டதாக
செய்திகள் வெளியாகின.
மருத்துவமனை
ரப்பர்
உள்ளே சென்றதால் கமலுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், என்டோஸ்கோபி மூலம் ரப்பர் அகற்றப்பட்டது
என்றும் செய்திகள் வெளியாகின.
கமல்
காயம் குறித்த செய்தி அறிந்த
கமல் ஹாஸன் அது பற்றி
வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, படப்பிடிப்பின்போது நான் காயம் அடைந்ததாக
வந்த செய்திகளில் உண்மை இல்லை. என்
மூக்கில் வைக்கப்பட்டிருந்த ரப்பர் உள்ளே சென்றதால்
அதை மருத்துவர்கள் உதவியுடன் வெளியே எடுக்க வேண்டியதாகிவிட்டது.
அது சண்டை காட்சி என்பதால்
என் முகத்தில் போலியான காயங்கள் ஏற்படுத்தப்பட்டன
என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
செய்தி
முகத்தில்
போலி காயத்துடனேயே மருத்துவமனைக்கு சென்றதால் தான் பல வகையான
செய்திகள் வந்துள்ளது என்று நினைக்கிறேன் என
கமல் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment