விஜய்-சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள
புதிய படம் ‘கத்தி’. இப்படத்தை
ஏ.ஆர்.முருகதாஸ்
இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.
லைகா புரொடக்சன்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. படம் தீபாவளி வெளியீடாக
திரைக்கு வரவிருக்கிறது. பல பிரச்னைகளில் சிக்கி
தவித்தாலும் கத்தி படத்தின் எதிர்பார்ப்பு
ரசிகர்களிடையே விண்ணை முட்டும் அளவிற்கு
இருக்கிறது. தீபாவளி நெருங்கிவிட்டதால் படத்தின்
டிரைலரை சீக்கிரமே வெளியிடமாட்டார்களா என்று ரசிகர்கள் பல
நாட்களாக ஏங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில்
அவர்களின் காத்திருப்பு வீணாகவில்லை.
நேற்று
மாலை ஒரு வழியாக ரிலீஸாகிவிட்டது
‘கத்தி’ டிரைலர். இந்த டிரைலர் 1 நிமிட
36 வினாடிகள் வரை ஓடக் கூடியதாக
உள்ளது. ‘கத்தி’ படத்தில் விஜய்
இரட்டை வேடங்களில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரை வெளிவந்த
புகைப்படங்களிலோ, டீஸரிலோ இரண்டு விஜய்
இருப்பது போன்ற காட்சி எதுவும்
இடம்பெறவில்லை. டிரைலரில் கூட ‘கதிரேசன்’ என்ற
பெயர் மட்டும் இடம் பெற்றிருக்கிறது.
ஜீவனாந்தம் குறித்த எந்த வசனமும்
இடம்பெறவில்லை.
இதை எல்லாம் வைத்து பார்க்கும்
போது ‘அஞ்சான்’ சூர்யா போன்று விஜய்யும்
இரண்டு கேரக்டர் பெயர்களில்தான் வருகிறாரோ என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.
இருந்தாலும் கத்தி படத்தின் டிரைலர்
ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று
வருகிறது. நேற்று மாலை வெளியான
இதன் டிரைலரை கடந்த சில
மணி நேரங்களுக்குள்ளாகவே 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.

No comments:
Post a Comment