Thursday, October 9, 2014

ஆசிய விளையாட்டு போட்டிகள் : ஏழு வீரர்களை காணவில்லை!


தென் கொரியாவில் உள்ள இன்சியானில் ஆசிய விளையாட்டு போட்டிகள் அண்மையில்  நடைபெற்றது. இப்போட்டிகளில்  கலந்து கொள்ள வந்த வீரர்களில் ஏழு பேரைக்  காணவில்லை என்று புகார் கூறப்பட்டுள்ளது.


நேபாள நாட்டைச்  சேர்ந்த மூன்று வீரர்களும், இலங்கையை சேர்ந்த இரண்டு வீரர்களும், வங்காளதேசம் மற்றும் பாலஸ்தீன நாட்டை சேர்ந்த தலா ஒரு வீரரும் காணாமல் போனதாக இன்சியான் போலீசார் தெரிவித்தனர்.



நான்கு நாடுகளின் அணி நிர்வாகிகள், போட்டிகளை நடத்தும் இன்சியான் நிர்வாகிகளைச்  சந்தித்து வீரர்கள் காணாமல் போனது குறித்து முறையிட்டனர். இதனையடுத்து அவர்களைத்  தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


No comments:

Post a Comment