நாதுராம் கோட்சே மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றதற்கு பதிலாக முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவை சுட்டுக் கொன்றிருக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இது தொடர்பான ஒரு தலையங்கத்தை ஆர்.ஆர்.எஸ் அமைப்பின்
அதிகாரப்பூர்வ பத்திரிகையான கேசரியில் எழுதப்பட்டுள்ளது. கேரளாவின் சாலக்குடியில் மக்களவை தேர்தலில் போட்டியிட்ட
பாரதிய ஜனதா வேட்பாளர் கோபாலகிருஷ்ணன்,
இந்திய பிரிவினைவாத மற்றும் மகாத்மா காந்தி
படுகொலை போன்ற பெரிய தேச
பயங்கரங்களுக்கு நேருவும் அவரது சுயநலமும்தான் காரணம்
என்று கூறப்பட்டுள்ளது.
மேலும்
பிரிவினைக்கு முந்தைய வரலாற்று உண்மைகள்
மற்றும் கோட்சேவின் பார்வைகள் என்பதில் கோட்சே தவறான பாதையை
தேர்ந்து எடுத்து விட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக
தகவல்கள் வெளியாகி உள்ளனர.
ஆர்.எஸ்.எஸ்சின் இந்த
கருத்துக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக்
சிங்வி இன்று கூறுகையில், ஆர்.எஸ்.எஸ் மற்றும்
பாரதிய ஜனதாவின் உண்மையான முகத்தை மக்கள் இனியாவுது
புரிந்துக் கொள்ள வேண்டும். இது
போன்ற ஆர்.எஸ். எஸ்சின்
கொள்கை மனவேதனை மற்றும் ஏமாற்றத்தையும்
தருகிறது"' என்றார்.
No comments:
Post a Comment