விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Thursday, December 30, 2010

    விண்டோஸ் வேகமாக இயங்க



    நம்மில் 90% பேர் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துகிறோம் என்பது, பன்னாட்டளவில் அறியப்பட்ட உண்மை. அதன் இயக்கம், அதனுடன் நமக்கேற்பட்ட பழக்கம் அவ்வாறான ஓர் இடத்தை அதற்கு அளித்திருக்கிறது. விண்டோஸ் இயக்கத்தை இன்னும் வேகமாக இயக்கி, திறன்களை எளிதாகப் பெற இங்கு டிப்ஸ்கள் தரப்படுகின்றன.
    1.
    மினிமைஸ்: பல புரோகிராம்களை ஒரே நேரத்தில் இயக்குகையில், பல விண்டோஸ்கள் திறக்கப்படும். இவை அனைத்தையும், திரையில் திறந்து வைத்தவாறே இயக்க வேண்டாம். எந்த விண்டோவில் பணியாற்று கிறீர்களோ, அதனை மட்டும் திறந்து வைக்கவும். மற்றவற்றை மினிமைஸ் செய்து வைக்கவும்.
    2.
    இமெயில் போல்டர்: இமெயில் கிளையண்ட் எதுவானாலும், மொத்தமாக அவற்றை ஒரே இன்பாக்ஸில் போட்டு வைக்க வேண்டும். இதிலும் போல்டர்களை ஏற்படுத்தி, மெயில்களைப் பிரித்து வைக்கவும். அவ்வப்போது படித்து, முக்கியத்துவம் இழந்த மெயில்களை நீக்கவும். 
    3.
    சரியான பயன்பாடு: போல்டர்களுக்குச் சரியான பெயர் கொடுத்து, மெயில்களைப் பொருள் வாரியாகப் பிரிக்கவும். ஒரே போல்டரில், அதிக மெயில்களைத் தேக்குவது போல்டர்கள் அமைத்த நோக்கத்தை செயல்படுத்தாது.
    4.
    அப்புறம் பார்க்கலாம்: பின் நாளில் பார்த்துக் கொள்ளலாம் என்ற வகையில் பல மெயில்கள் வரும். இவற்றிற்கென ஒரு போல்டரை உருவாக்கி அதில் போட்டு வைத்து, நேரம் கிடைக்கும்போது கண்டறிந்து, நீக்கவும்.
    5.
    பிரவுசரின் தேடல் சாதனம்: உங்களுக்கென விருப்பமான தேடல் சாதனத்தினை, மாறா நிலைக்கு (டிபால்ட்) தேர்ந்தெடுத்து அமைக்கவும். இல்லையெனில், லிங்க்கில் கிளிக் செய்திடுகையில், சிஸ்டம் அமைத்த சர்ச் இஞ்சினும் , நீங்கள் பயன்படுத்த இன்னொன்றுமாய் கிடைக்கும். 
    6.
    பைல் பெயர் மாற்றம்: பைல்களின் பெயர்களை மாற்ற விரும்புகிறீர்களா? நிறைய பைல்கள் மாற்றப்பட வேண்டுமா? முதல் பைலைத் தேர்ந்தெடுக்கவும். எப்2 அழுத்தவும். புதிய பெயரை டைப் செய்திடவும். இனி, என்டர் அழுத்தாமல், டேப் கீ அழுத்தவும். எக்ஸ்புளோரர் உங்களை அடுத்த பைலுக்கு எடுத்துச் செல்லும். அந்த பைலின் பெயர் தானாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, மாற்றத்திற்குத் தயாராய் இருக்கும். பேக் ஸ்பேஸ் கீயெல்லாம் அழுத்த வேண்டாம்.
    7.
    இமெயில் செக்கிங்: அடிக்கடி உங்கள் இமெயில்களை செக் செய்து பெறும்படி அமைக்க வேண்டாம். இதனால், உங்கள் வழக்கமான கம்ப்யூட்டர் பணியில் தேவையற்ற குறுக்கீடு இருக்கும். எனவே எத்தனை நிமிடங்களுக்கு ஒரு முறை செக் செய்திட வேண்டும் என்பதனை, இதன் அடிப்படையில் அமைக்கவும்.
    8.
    பல பைல் தேர்ந்தெடுக்கும் எளிய வழி: ஒன்றுக்கு மேற்பட்ட பைல்களை, விண்டோஸ் எக்ஸ்புளோரரில் தேர்ந்தெடுக்கிறீர்களா? கண்ட்ரோல் அல்லது ஷிப்ட் கீயை அழுத்தித் தான் பலரும் இந்த செயலை மேற்கொள்கிறோம். இதனால் சில வேளைகளில் தவறுகள் ஏற்படுகின்றன. இதற்கு மாற்றான வழி ஒன்றும் உள்ளது.  முதலில் Organize>Folder and search options>View என்று செல்லுங்கள். பின்னர் கீழாகச் சென்று Use check boxes to select items என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து ஓகே கிளிக் செய்திடவும்.  இதன் மூலம் டிக் செய்து பைல்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
    9.
    ஸ்பேம் நீக்கவும்: உங்களுடைய கம்ப்யூட்டரில் ஸ்பேம் மெயில்களை வடிகட்டுவதற்கென புரோகிராம் இல்லை எனில், உடனடியாக ஒன்றை இன்ஸ்டால் செய்திடவும்.
    10.
    விண்டோஸ் 7 கால்குலேட்டர்: விண்டோஸ் இயக்கத் தொகுப்புகளில் கால்குலேட்டர்கள் இணைந்தே தரப்பட்டன. ஆனால் சில சிறப்பான கால்குலேட்டர் செயல்பாடுகளுக்கு, இணைய தளங்கள் தரும் இலவச கால்குலேட்டர் புரோகிராம்களை பதிந்து பயன்படுத்தினோம். விண்டோஸ் 7 சிஸ்டத்தில் நீங்கள் இயங்கிக் கொண்டிருந்தால், வேறு ஒரு புரோகிராமிற்குச் செல்ல வேண்டியதில்லை. இதில் கிடைக்கும் கால்குலேட்டர் மிகச் சிறப்பானதாகப் பல செயல்பாடுகளைத் தாங்கி உள்ளதாக அமைந்துள்ளது.
    11.
    பிரச்னை பதிவு: விண்டோஸ் இயக்கத்தில் பிரச்னைகள் ஏற்பட்டு, உங்கள் டெக்னீஷியனை அடிக்கடி அழைத்து, பிரச்னைகள் குறித்து நிறைய விளக்கம் தர வேண்டியுள்ளதா? நீங்கள் சொல்வது அவருக்கும், அவர் கேட்பது உங்களுக்கும் புரியாமல், பல தொலைபேசி அழைப்புகளை   வீணாக்குகிறீர்களா? இது தேவையே இல்லை. Windows’ Problem Steps Recorder  என்பதை இயக்கினால் போதும். வரிசையாக, ஒவ்வொரு ஸ்டெப் ஆக, என்ன நடை பெற்றது என்று உங்களுக்கு இது காட்டும். இதனைப் பெற PSR  என ஸ்டார்ட் மெனு சர்ச் பாக்ஸில் டைப் செய்திடவும். மிக விலாவாரியாக, ஸ்கிரீன் ஷாட்களுடன் உங்கள் பிரச்னைகளை இதில் காணலாம்.
    12.
    திரை இடம் பெரிதாக: டாஸ்க்பார் ஐகான் பெரிதாக அமைந்து, மானிட்டர் திரையில், நீங்கள் இயங்கும் இடம் சுருங்குகிறதா? டாஸ்க்பாரில் ரைட் கிளிக் செய்து Properties > Use small icons  என அமைக்கவும்.  இதன் மூலம் அனைத்து ஐகான்களும் பாதியாக அதன் அளவில் குறையும். நீங்கள் இயங்க அதிக இடம் கிடைக்கும்.
    13.
    சிறிய, பெரிய எழுத்துக்கள்: எழுத்துக்களை அமைத்துவிட்டு, அதனை முழுமையாகப் பெரிய எழுத்துக்கள் அல்லது முதல் எழுத்து மட்டும் பெரிய எழுத்தாக அமைக்க வேண்டுமா? ஒவ்வொரு எழுத்தாகத் தேடிச் சென்று மாற்ற வேண்டாம். மாற்ற வேண்டிய டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்து, பின்னர், ஷிப்ட் + எப்3 கீயை அழுத்தினால், இந்த ஆப்ஷன்கள் வரிசையாகக் காட்டப்படும். தேவையானதை எடுத்துக் கொள்ளலாம்.
    14.
    பின் அப்: விண்டோஸ் 7 தொகுப்பில் எதனையும் டாஸ்க்பாரில் பின் செய்தி டலாம். அடிக்கடி பயன்படுத்தப் படும் போல்டர்கள், கண்ட்ரோல் பேனல், ஏன் ஒரு செயல்பாட்டிற்கென அமைக்கப் பட்ட பட்டனைக் கூட இதில் அமைத்திடலாம்.
    15.
    ஆட் ஆன் நேரம்: உங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு இயக்கத்திற்குக் கிடைக்க அதிக நேரம் ஆகிறதா? இதனுடன் இணைந்த ஆட் ஆன் தொகுப்பே இதற்குக் காரணம். Tools>Manage Addons  சென்று ‘Load time’  என்பதில் ஒவ்வொரு ஆட் ஆன் தொகுப்பிற்கான நேரம் பார்க்கலாம். பின்னர், அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் புரோகிராமினை, தேவை இல்லை என்றால் நீக்கிவிடலாம். 




    Posted by விழியே பேசு... at 9:05 AM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: தகவல் தொழில்நுட்பம், தொழில்நுட்பம்

    1 comment:

    1. ThoduvanamFebruary 13, 2011 at 10:47 PM

      Very useful hints Thanks

      ReplyDelete
      Replies
        Reply
    Add comment
    Load more...

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ▼  2010 (406)
    • ▼  December (288)
      • 2010 -ல் தமிழகம் ஒரு பார்வை -பாகம் இரண்டு
      • நித்யானந்தாவுடன் படுக்கையில் இருந்தது நானில்லை!- ர...
      • பரபரப்பு வீடியோ காட்சிகள்: நடிகை ரஞ்சிதா விளக்கம்!
      • களவாணி கல்யாணம்... பெற்றோரை சமாதானப்படுத்திய விமல்!
      • இசையுலகிற்கு தற்காலிக டாட்டா -ரஹ்மான் திடீர் முடிவு
      • 1000 வெடிகுண்டு லாரிகள் ஊடுறுவல்-தீவிரவாதிகள் சதி-...
      • 2010ல் உதிர்ந்த திரை மலர்கள்!
      • ஓரங்கட்டப்பட்ட ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்!
      • காலை வாரி விடாதீர்கள், ப்ளீஸ்-ஜெயலலிதா கெஞ்சல்
      • செல்வராகவன் படத்திலிருந்து விலகியது ஏன்?
      • விண்டோஸ் எக்ஸ்பி- விஸ்டா சில ரகசியங்கள்
      • வடிவேலு மகனை ஹீரோவாக ஆக்க செலவு செய்த நான்கு லட்சம்
      • 2010 டாப் 10௦ பாடல்கள் எனது பார்வையில் பாகம் 1
      • வனிதா விவகாரம் இன்று குடும்ப நல கோர்ட்டில் நடந்தத...
      • சித்து +2 வீடியோ பாடல்கள்
      • அஜித்தின 51வது படம் 'பில்லா 2' புதிய தகவல்
      • 2010 -ல் தமிழகம் ஒரு பார்வை -பாகம் ஒன்று
      • "வனிதாவிடம் குழந்தையை ஒப்படைக்க மாட்டேன்..." - ஆகாஷ்
      • விஜய்- சீமான் இணைந்து நடிக்கும் 'சட்டம் என்ன செய்ய...
      • இயக்குநர் பாலசந்தருக்கு சர்வதேச ஏ.என்.ஆர்., விருது
      • 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சாமி பல்டி
      • நண்பேன்டா... உதயநிதி ஜோடி முடிவானது
      • ' ஆமாம் வானம் பட இயக்குனரை காதலிக்கிறேன்' - அனுஷ்கா
      • நயன்தாராவுக்கு காஞ்சிபுரத்தில் தயாராகும் முகூர்த்த...
      • வனிதாவை கைது செய்தே தீரவேண்டும்! - விஜயகுமார்
      • நான் நிரபராதி நான் நிரபராதி நம்புங்கப்பா... -நித்...
      • பிரபுதேவா - ரமலத் திரைமறைவு பேரத்தில் நடந்தது என்ன?
      • விண்டோஸ் வேகமாக இயங்க
      • இப்படியும் ஒரு தயாரிப்பாளரா....?
      • ஆஸ்ட்ரேலியா இன்னிங்ஸ் தோல்வி; இங்கிலாந்து ஆஷஸ் கோப...
      • வனிதா அரசியலில் குதிக்கிறார்
      • எம்ஜிஆரை இழிவுபடுத்திய வைரமுத்து?
      • நீரா ராடியா சொல்படி அம்பானிக்கு சாதமாய் தீர்ப்பளித...
      • விஜயின் பரிதாப நிலை காவலனுக்கு கிடைத்தது 70 தியேட்...
      • தமன்னாவுக்கு மவுசு குறைந்தது
      • வனிதாவுக்கு பயந்து எங்கும் ஓடி ஒழியவில்லை -அருண் வ...
      • விக்ரம் அமலா பால் இடையே காதல் ....?
      • ஜூலையில் பிரபுதேவா-நயன் திருமணம்
      • நித்தியானந்தா கோவில் பின்வாசல் வழியாக தப்பி ஓட்டம்
      • ரம்லத் - பிரபு தேவாவின் ரூ 30 கோடி விவாகரத்து டீல்...
      • காவலனை வாங்கியது பிரபல டிவி
      • வனிதா-விஜயகுமார் அடிதடி காட்சியின் வீடியோ
      • விண்டோஸ் 7 அற்புத வசதிகள்
      • குழந்தையை கடத்தியதாக விஜயகுமார் மீது வழக்கு -வனிதா
      • 'மன்மதன் அம்பு' நீக்கப்பட்ட சர்ச்சைக்குரிய பாடலின்...
      • மன்மதன் அம்பு வீடியோ பாடல்
      • விக்கிலீக்ஸின் அடுத்த இலக்கு உலக பொருளாதாரமே ஆட்டம...
      • நடிகை ரம்பாவின் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல்
      • சிம்புவின் வானம் ரிலீஸ் தியதி மாறியது
      • பணம் கொடுத்து சரிகட்டிய பிரபுதேவா விவாகரத்துக்கு ர...
      • அரசியலுக்கு வந்தால் சினிமாவில் நடிக்கவே மாட்டேன்-அ...
      • விஜயகுமாருடன் மோதிய வனிதா-விமான நிலையத்தில் அடிதடி
      • சென்னையில் இருக்கும் அருண் விஜய்யை கைது செய்யுங்கள...
      • சர்ச்சையை கிளப்பும் ராணி, வித்யா முத்தம் -வீடியோ
      • இயக்குநர் மிஷ்கின் மனநேயாளியா..?
      • படமாகிறது மும்பை தாக்குதல் சம்பவம்!
      • ப்ளாங்க் செக்கொடுத்தும் சுயசரிதை எழுத மறுத்த ஐஸ்வர...
      • இந்தியா 2010 - இந்தியாவில் நடந்த முக்கிய நிகழ்வுகள்
      • கோ படத்தில் நடிக்கும் முன்னணி நட்சத்திரங்களின் பட்...
      • நீரா ராடியா குறித்த பல ரகசியங்கள் வெளியானது...
      • மீண்டும் ரீலிஸ் ஆகிறது தா படம்!
      • ரஜினியின் அடுத்தபடம் பெயர் 'ஜோகய்யா'
      • சர்ச்சையை கிளப்பும் ராணி, வித்யா முத்தம்
      • தனுஷ் பட பெயர் மாறியது, இசையமைப்பாளரும் மாறினார் !
      • சினிமாவில் இன்று காதல், காதல் தோல்வி தவிர வேறும் இ...
      • கலைஞர் செய்வது அனைத்தும் அயோக்கியத்தனம் - சீமான் (...
      • காங்கிரசுக்கு திமுக இறுதி எச்சரிக்கை ....?
      • விண்டோஸ்-7 தீர்வுகள்
      • ஜெ.வுடன் நெருங்குகிறார் நமீதா!
      • " விஜயகாந்த், 2011ல் தமிழக முதல்வராவார்," புது விள...
      • லண்டனில் உண்ணாவிரதம் இருந்த தமிழர் இலங்கைக்கு நாடு...
      • அமலா பால் பந்தா ....
      • திருநங்கை கல்கி நாயகியாக நடிக்கும் 'நர்த்தகி'
      • மலையாளத்திலும் கலக்கப்போகிறார் வடிவேலு
      • சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேர துடிக்கும் திரிஷா.
      • தயாநிதி மாறன் செய்தது சரியென்றால் ராசா செய்ததும் ச...
      • மங்காத்தா புதிய தகவல்
      • பல வசதிகளுடன் கூடிய புதிய நோட்பேட்
      • தமிழ் திரையுலகின் முக்கிய நிகழ்வுகள் 2010
      • இயேசு பிறந்த பெத்லகேமில் வரலாறு காணாத கூட்டம்
      • மன்மதன் அம்பு கமல் சிறப்பு பேட்டி - வீடியோ
      • சல்மான் கான் - அசின் ரகசிய திருமணம்...!
      • நீரா ராடியாவுடன் அத்வானிக்கு தொடர்பா? புதிய சர்ச்சை
      • எந்நேரமும் தீவிரவாதிகள் தாக்கும் அபாயம் உச்சகட்ட ...
      • 'ஸ்பெக்ட்ரம்' ராசாவிடம் 9 மணி நேரம் விசாரணை... இன்...
      • சிறந்த பிரவுசர் தொகுப்பு எது?
      • கிறிஸ்மஸ் விழா ...
      • இயக்குனராகும் கமல் மகள்!
      • ராசாவிடம் 8 மணி நேரத்திற்கும் மேலாக சிபிஐ விசாரணை ...
      • டாஸ்மாக் கடையிலும் கருணாநிதி படம் வைக்க வேண்டும் -...
      • ஐ.நா நிபுணர் குழு இலங்கைவந்தால் நாடுதிரும்ப முடியா...
      • வெங்காயம் வாங்க வங்கிக் கடன் கேட்ட முதல்வரின் மனைவி!
      • இத்தாலியராகவே இருக்கும் சோனியா காந்தி - விக்கிலீக்...
      • அஜித் ரசிகர் மன்ற கலைப்பு மிரட்டல்! பின்னணி இதோ
      • காங்கிரஸ் கட்சியில் சேர ஆசைப்படும் கவர்ச்சி நடிகை!
      • இயக்குநர் செல்வராகவனின் புதிய காதல்
      • சிறந்த படமாக அங்காடித்தெரு தேர்ந்தெடுக்கப்பட்டது.
      • கமல்ஹாசன் தலைமையில் நான்கு பட வெற்றி விழா
      • சந்திரமுகி இரண்டாம் பாகம்... நடிக்க ரஜினி மறுப்பு!
      • மன்மதன் அம்பு... ரஜினி வாழ்த்து!
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.