Friday, January 7, 2011
பிரபல நடிகரை தாக்கீப் பேசிய பிரபல நடிகைகள்!
பாலிவுட்டில் இப்போதெல்லாம் கருத்து மோதல் நடப்பது என்பது வாடிக்கையான செயல்களில் ஒன்றாகிவிட்டது. அந்த வகையில், சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இரண்டு பிரபல நடிகைகள் தங்களுடன் நடித்த நாயகனான ரன்பீர் கபூரைத் தாக்கி பேசியது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. அந்த இரண்டு நடிகைகள் வேறு யாருமில்லை, தீபிகா படுகோன் மற்றும் சோனம் கபூர்தான்! இவர்களில் தீபிகாவும், ரன்பீரும் சில மாதங்களுக்கு முன்பு வரை தீவிர காதலர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ரன்பீரைப் பற்றிய பேச்சு எழுந்தபோது, இரு நடிகைகளும் சரமாரியாக அவரை விமர்சித்தனர். தீபிகா பேசும்போது, ""வாழ்க்கையில் நான் செய்த மிகப் பெரிய தவறு ரன்பீரை காதலித்ததுதான். அவர் காதலுக்கே லாயக்கில்லாதவர்'' என்று கோபப்பட, இதனைத் தொடர்ந்து பேசிய சோனம் கபூர், ""ரன்பீர் செக்சியான ஆள் கிடையாது. அவரை நான் காதலிக்கும் அளவிற்கு அவரிடம் என்ன தகுதியிருக்கிறது?'' என்று சற்று கடுமையாகவே விமர்சித்துவிட்டார். இந்த சம்பவம் பாலிவுட்டைச் சேர்ந்த பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சோனம் கபூரின் இந்த விமர்சனம், ரிஷி கபூரின் குடும்பத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுக்குறித்து ரிஷியின் குடும்பத்தினர் சோனம் கபூரின் அப்பாவான அனில் கபூரிடம் பேசியிருக்கிறார்களாம்! இதைக் கேள்விப்பட்ட சோனம், ""தொலைக்காட்சி நிகழ்ச்சிகளால்தான் எனக்கு பிரச்சினைகள் அதிகம் வருகிறது'' என்று நண்பர்களிடம் புலம்பியிருக்கிறாராம்.
Labels:
சினிமா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment