சீனுராமசாமி இயக்கத்தில் தற்போது ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கும் படம் “தென்மேற்கு பருவக்காற்று” நாயகனாக விஜய் சேதுபதி, நாயகியாக வசந்தரா நடித்துள்ளனர். அம்மா கேரக்டரில் சரண்யா வருகிறார். மைக்கேல் ராயப்பன் இப்படத்தை ரிலீஸ் செய்துள்ளார்.
இந்த படத்தை நடிகர், நடிகைகள் பாராட்டி உள்ளனர். இந்தி நடிகர் விவேக் ஓபராயும் படத்தை பார்த்துள்ளார். அவருக்கு பிடித்து போனது. இதையடுத்து இந்தியில் ரீமேக் செய்து அவரே நடிக்கிறார். இது குறித்து இயக்குனர் சீனுராமசாமி கூறியதாவது:-
தென்மேற்கு பருவக்காற்று படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. சாமானிய மக்களின் படமாக இது உள்ளது. குடும்பத்தோடு கூட்டம் கூட்டமாய் வருகிறார்கள். இந்த படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. விவேக் ஓபராய் தொடர்பு கொண்டு நாயகனாக நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். சரண்யாவே இந்தியிலும் அம்மாவாக நடிக்கிறார். கதாநாயகிக்கு ராணி முகர்ஜி, வித்யாபாலன் போன்றோர் பரிசீலிக்கப்படுகின்றனர்.
செழியன் ஒளிப்பதிவு செய்கிறார். என்.ஆர். ரகுநந்தன் இசையமைக்கிறார். மைக்கேல் ராயப்பன் இந்தியில் இப்படத்தை தயாரிக்கிறார். பூலான்தேவி வாழ்ந்த சம்பல் பள்ளத்தாக்கு பகுதியில் படப்பிடிப்பை நடத்த உள்ளோம். கேன்ஸ் உள்ளிட்ட சர்வதேச படவிழாக்களுக்கும் இந்தப்படம் அனுப்பப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் கூறும்போது, “தென்மேற்கு பருவக்காற்று” படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பால் மேலும் கூடுதல் பிரிண்ட்கள் போடப்பட்டு தியேட்டர்கள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு உள்ளன. சென்னையில் மேலும் பத்துக்கு மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடப்பட்டு உள்ளன. தெலுங்கிலும் ரீமேக் செய்யப்படுகிறது என்றார்
No comments:
Post a Comment