நடிகை சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்தவர் டைரக்டர் செல்வராகவன். தனுஷ் நாயகனாக நடித்த காதல் கொண்டேன் படத்தை இயக்கிய செல்வராகவன், அந்த படத்தில் நாயகியாக அறிமுகமான சோனியா அகர்வாலை காதலித்தார். இந்த காதல் கனிந்து கசிந்துருகி கல்யாணத்தில் முடிந்தது. திருமணத்துக்கு பின்னர் சோனியா சினிமாவில் நடிப்பதை தவிர்த்தார். காலப்போக்கில் சோனியா அர்வாலுக்கும், செல்வராகவனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பரஸ்பர விவாகரத்து செய்து கொண்டனர். இந்த பிரிதலுக்கு காரணம் நடிகை ஆண்ட்ரியா என்று கூறப்பட்டது. செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நாயகியரில் ஒருவரான ஆண்ட்ரியாவுடன் செல்வராகவன் நெருங்கி பழகியதாகவும், அது சோனியாவுக்கு பிடிக்காததால் சண்டை போட்டு பிரிந்து விட்டதாகவும் அப்போது தகவல்கள் வெளியாயின.
தற்போது இரண்டாம் உலகம் என்ற படத்தை தனுஷ் மற்றும் ஆண்ட்ரியாவை வைத்து இயக்கி வரும் செல்வராகவன் மீண்டும் காதலில் விழுந்து விட்டாராம். அந்த படத்தில் செல்வாவுக்கு அசிஸ்டண்ட்டாக பணிபுரியும் கீதாஞ்சலி என்பவரைத்தான் செல்வராகவன் காதலிக்கிறார். இதனை வெளிப்படையாகவே தெரிவித்திருக்கும் செல்வராகவன், கீதாஞ்சலி மிகவும் அன்பானவர் என்றும், எனது உணர்வுகளை புரி்நது கொண்ட உண்மையான காதலி என்றும் கூறியிருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்தியில், "இன்று எனது சொந்த வாழ்க்கையிலும், சினிமாவில் ஏற்பட்டுள்ள சில முன்னேற்றங்கள் குறித்து பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
தற்போது தனுஷ், ஆண்ட்ரியா இயக்கத்தில் 'இரண்டாம் உலகம்' படத்தை இயக்கி வருகிறேன்.
எழுபது சதவீத படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளது.
அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமனின் மகள் கீதாஞ்சலியை திருமணம் செய்துகொள்ள இருக்கிறேன்.
எங்களது நிச்சயதார்த்தம் பிப்ரவரியில் நடைபெறும். அதைத் தொடர்ந்து, ஜூனில் திருமணம் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்," என்று கூறியுள்ளார்.

No comments:
Post a Comment