நடிகை வனிதாவுடன் தொடர்ந்து சண்டை போட்டு வரும் நடிகர் விஜயகுமாருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் விஜயகுமாருக்கும், அவரது இரண்டாவது மனைவியின் முதல் மகள் வனிதாவுக்கும் இடையே சமீப காலமாக பேரனை உரிமை கொண்டாடுவது தொடர்பாக பிரச்னை இருந்து வருகிறது. வனிதாவுக்கும் அவரது முதல் கணவர் ஆகாஷூக்கும் பிறந்த சிறுவன் விஜய் ஸ்ரீஹரி யாரிடம் வளர்வது என்ற பிரச்னை பூதாகரமாக வெடித்து கோர்ட் - கேஸ் என நீடித்து வருகிறது. இதனிடையே சமீபத்தில் பேரனுடன் ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த விஜயகுமாருடன், வனிதா தகராறு செய்தார். அப்போது வனிதாவை தகாத வார்த்தைகளால் திட்டிய விஜயகுமார், பிடித்து தள்ளினார். விமான நிலைய வாசலில் நடு ரோட்டில் நடந்த இந்த தகராறை பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர்.
இந்த சம்பவத்துக்கு பிறகு விஜயகுமார் - வனிதா இடையேயான பிரச்னை வனிதா - ஆகாஷ் இடையேயான பிரச்னையாக திசை திரும்பியது. மகனை வளர்ப்பது தொடர்பாக தாயும், தந்தையும் கோர்ட்டை நாடியிருக்கிறார்கள். அதே நேரம் பிரச்னை வெடிக்கத் தொடங்கியதில் இருந்தே நடிகை வனிதா அளித்த பேட்டிகளில், விஜயகுமார் வீட்டில் சட்டவிரோத செயல்கள் நடக்கின்றன. அவற்றை வெளியே சொன்னால் நாறிப் போய் விடும். தனது தாய் மஞ்சுளா போதைக்கு அடிமையாகி விட்டார் என்றெல்லாம் அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்து வருகிறார். விஜயகுமாரின் சொத்துக்கள் எதுவும் தனக்கு தேவையில்லை என்று கூறிய வனிதா, விஜயகுமாரின் வீடு ஒரு பாவப்பட்ட வீடு என்றும் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் நடிகர் விஜயகுமாருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

No comments:
Post a Comment