அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த தினம் இருக்கிறதே, அது ரொம்ப ரொம்ப விசேஷம்! 1-1-11...
டெலிவரிக்கு இன்னும் சில நாட்கள் இருந்த நிலையில் கடந்த 31 ந் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் மீனா. சிசேரியன் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள ஆசைப்பட்டாராம். நார்மல் டெலிவரி என்றால் ஃபேன்சி டேட் அமையாதே என்பதால்தான் இந்த முறையை கடைபிடித்தார். குழந்தை பிறந்ததும் மீனாவின் கணவர் வித்யாசாகர் நண்பர்களுக்கு இனிப்பு வழங்கி குழந்தை பிறந்த சந்தோஷத்தை பகிர்ந்தார்.
இந்நிலையில் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவை சைதாப்பேட்டையில் உள்ள மீனா வீட்டில் விமரிசையாக நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். இன்னும் ஒரிரு தினங்களில் இதை நடத்துகின்றார். இவ்விழாவுக்கு நடிகர் நடிகைகளையும் நெருங்கிய தோழிகளையும் மீனா டெலிபோனில் அழைத்து வருகிறார்.
பெயர் சூட்டும் விழ நடத்துவதற்கும் ஏதாவது ஃபேன்சி டேட் இருந்தா சொல்லுங்கபா...
No comments:
Post a Comment