தங்கபாலுவை கட்சியில் இருந்து நீக்க கோரி ஓமலூரில் இன்று காங்கிரசார் உண்ணாவிரதம் இருந்தனர். காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவை மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
மேலும் தங்கபாலவின் உருவ பொம்மையை எரித்து வருகிறார்கள். அவருக்கு எதிராக உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் உள்பட பல்வேறு போராட்டங்களை காங்கிரசார் நடத்தி வருகிறார்கள்.
மேலும் 19 பேரை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கி தங்கபாலு நடவடிக்கை எடுத்து உள்ளார்.இது தொடர்பாக கட்சி மேலிட பிரதிநிதி சென்னை வந்து விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில் தங்கபாலுவை காங்கிரஸ் கட்சியில் இருந்தே நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி சேலம் மாவட்டம் ஓமலூரில் இன்று காங்கிரசார் உண்ணாவிரதம் இருந்தனர். ஒமலூர் பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. உண்ணாவிரதத்துக்கு ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் செய லாளர் ரகு நந்தகுமார் முன்னிலை வகித்தார். சுசீந்திரகுமார், கிருஷ்ணன், கோவிந்தராஜ், கோடையிடி வெங்கட், கருப்பூர் சிவக் குமார், கிருஷ்ணராஜ, சவுந்தர்ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பாரம்பரிய மிக்க காங் கிரஸ் கட்சியின் பெருமையை சீரழிய காரணமாக இருந்த தங்கபாலுவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே நீக்க வேண்டும் என்ற சுசீந்திரகுமார் கோஷம் எழுப்பினார். அதை மற்றவர்கள் திருப்பி சொன்னார்கள்.
No comments:
Post a Comment