வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாரதீய ஜனதா கட்சி மாநில முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்,
இந்த தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் இருக்காது. இதற்கு சீமானோ, பாரதீய ஜனதா கட்சியோ தேவை இல்லை. தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவே போதும்.
அசாம் மாநிலத்தில் பாரதீய ஜனதா இல்லாமல் புதிய அரசு இல்லை. மேற்கு வங்காளம், கேரளாவிலும் புதிய வெற்றி சிகரங்களை பாரதீய ஜனதா கட்சி அடையும்.
கதாநாயகனை அ.தி.மு.க.வினரும், காமெடியனை தி.மு.க.வினரும் பிடித்து கொண்டு இருக்கின்றனர். காமெடியன் பேச்சை மக்கள் ரசிப்பார்களே தவிர ஓட்டு போட மாட்டார்கள். தேர்தலுக்கு பிறகு கதாநாயகனுக்கும், காமெடியனுக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்வார்கள்.
தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. பாரதீய ஜனதா 194 தொகுதியிலும், ஜனதா கட்சி 10 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 5 தொகுதிகளிலும் கூட்டணி வைத்து போட்டியிடுகிறது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான அறிகுறி தெரிகிறது. பாரதீய ஜனதா கட்சி இந்த தேர்தலில் வெற்றிடத்தை நிரப்பும்.
இந்த தேர்தலில், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை பாராட்டும் வகையில் உள்ளது. குறை கூறுவதற்கு ஒன்றுமில்லை. பணம் எடுத்து செல்பவர்கள் தகுந்த ஆவணத்துடன் சென்றால் எந்த பிரச்சினையும் இல்லை என்றார்.
No comments:
Post a Comment