ஆந்திர மாநிலம் கடப்பா பாராளுமன்ற தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் மந்திரி டி.எல்.ரவீந்திராரெட்டி போட்டியிடுகிறார். 
கடப்பா தொகுதிக்குட்பட்ட பூக்கடை சவுராஷ்டிரா என்ற இடத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக நடிகர் சிரஞ்சீவி இன்று தேர்தல் பிரச்சாரம் செய்தார். 
அப்போது அவர் ஜெகன்மோகன்ரெட்டியை கடுமையாக தாக்கி பேசினார். இதனால் ஆத்திரம் அடைந்த தொண்டர்கள் அவர் மீது முட்டை மற்றும் செருப்பை சரமாரியாக வீசினார்கள். 
இதில் ஒரு செருப்பு ராஜசேகரரெட்டியின் சகோதரர் மீது விழுந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் கூட்டத்தினரை தடியடி நடத்தி கலைத்தனர்.

:))))
ReplyDelete