இலங்கை போர்க்குற்ற விசாரணை தொடர்பான ஐ.நா. அறிக்கை இன்று முழுமையாக வெளியிடப்படுகிறது.
இலங்கை உள்நாட்டு போரில் அந்நாட்டு ராஜபக்சே அரசு நடத்திய இன படுகொலை குறித்து ஐ.நா. மூவர் குழு விசாரணை நடத்தியது. ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் உத்தரவின்படி நடந்த முடிந்த இந்த விசாரணை அறிக்கை ஐ.நா. சபையிடம் கடந்த சில தினங்களுக்கு முன் சமர்பிக்கப்பட்டது.
பாதுகாப்பு வளையத்திற்குள் வரவழைக்கப்பட்ட அப்பாவி தமிழ் மக்களை இலங்கை ராணுவம் படுகொலை செய்தது, மருத்துவமனைகள், முகாம்கள், உணவு பொருள் சேமிப்பு கிடங்குகள் ஆகியவற்றை குண்டு வீசித் தகர்த்தது ஆகியவை உண்மைதான் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கையில் பிரபல பத்திரிக்கை ஒன்று பரபரப்பு செய்தி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் ஐ.நா.வின் போர்க்குற்ற விசாரணை அறிக்கை இன்று முழுமையாக வெளியிடப்படுகிறது.
இன்று வெளியாகும் இந்த அறிக்கை உண்மையில் நாம் எதிர்பார்த்ததை போல் இருக்கும் என்று எதிர்பார்க்க முடிய வில்லை. அப்படி எதிர்ப்பார்த்தால் அது நமது முட்டாள்தனமே! இலங்கை என்னும் உலகின் ஒரே வல்லரசு நாட்டை எதிர்க்கும் அளவுக்கு உலகின் எந்த நாட்டுக்கும், அல்லது எந்த அமைப்புக்கும் தைரியமோ, சக்தியோ கிடையாது என்பதே எனது தனிப்பட்ட கருத்து.
என்னை பொருத்தமட்டில் இந்த அறிக்கை வடிவேலு பாணி அறிக்கையாக தான் இருக்கும். அதாவது 'இலங்கை செய்ததது தப்பு தான் ஆனால் தப்பு இல்லை ' என்கிற மாதிரி . ஆனால் இலங்கையின் மனித உரிமை செயல்களுக்கு எதிராக செயல்படும் நாடுகளை சமாதனப்படுத்தும் விதமாக ஒரு அறிவிப்பை இறுதியாக சொல்ல போகிறார்கள். 'இறுதிக்கட்ட போரில் இலங்கையின் செயல் பாடுகளை பற்றி மீண்டும் ஆராய இருப்பதால் அதற்காக ஒரு விசாரணை குழுவை அமைத்துள்ளோம் ' என்பது தான் அந்த அறிவிப்பு.
மொத்தத்தில் தமிழனுக்காக உலகின் எந்த நாயும் பரிந்து (பரிதாபபட்டு) பேசாது.
ஏன் .....?

No comments:
Post a Comment