தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு விடுத்துள்ள அறிக்கையில்,
‘’தேர்தலின் போது காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும், ஒழுங்கு கட்டுப்பாட்டை மீறியும் செயல்பட்ட சிலர், காங்கிரசிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
அவர்கள் தங்களது கருத்தை தெரிவிக்க விரும்பினால் தமிழக காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்கு கடிதம் மூலமாக, தங்கள் மீதான இடைநீக்க நடவடிக்கையை மறுபரிசீலனை செய்திட மனு செய்யலாம் என அறிவித்திருந்தோம்.
ஆனால், இடை நீக்கம் செய்யப்பட்ட எவரிடமிருந்தும் இதுநாள் வரை தமிழக காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு எவ்வித கடிதமும் தரப்படவில்லை.
தேர்தலில் போட்டியிட வேட்பாளர் தேர்வு என்பது தமிழக காங்கிரஸ் தலைவராகிய என்னால் மட்டும் முடிவு செய்வது அல்ல.
அகில இந்திய காங்கிரசால் நியமிக்கப்பட்ட பல்வேறு குழுக்கள், நிர்வாகிகள் என அனைத்து நிலைகளிலும் பரிசீலிக்கப்பட்டு காங்கிரஸ் தலைமையால் இறுதி செய்யப்படுவதாகும். எனவே, வேட்பாளர் தேர்வு தொடர்பாக என் மீது சாட்டப்படுகிற குற்றச்சாட்டுகள் அனைத்தும் அகில இந்திய தலைமை மீது சாட்டப்படுகிற குற்றச்சாட்டுகள்.
என் மீது ஏதேனும் குற்றம் கூற விரும்பினால், அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு கடிதம் மூலம் தாராளமாக எழுதி அனுப்பலாம்.
அதை விடுத்து, இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் காங்கிரஸ் விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுவார்களேயானால், அவர்கள் மேன்மேலும் கட்சி நன்னடத்தைகளை மீறி செயல்பட்டு வருகிறார்கள் என்ற குற்றத்திற்கு மேலும் வலுசேர்ப்பதாகும் என எச்சரிக்க விரும்புகிறேன்’’ என்று கூறியுள்ளார்.
தங்கபாலு காங்கிரஸ் கோஷ்டிகளை ஒன்று சேர்த்து விடுவார்..
ReplyDelete