பட்டுக்கோட்டை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் என்.ஆர்.ரெங்கராஜனை ஆதரித்து நடிகர் வடிவேலு பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய வடிவேலு,
கடந்த 5 ஆண்டுல ஒரு கிலோ அரிசி 1 ரூபா, இலவச கேஸ் அடுப்பு, நாட்டு நடப்புகள தெரிஞ்சுக்க இலவச டி.வி, அந்த டி.வி.க்குள்ள நான், சமச்சீர் கல்வி, 3 வயசுல இருந்து 15 வயசு வரைக்கும் சத்துணவுல வாரம் 5 இலவச முட்டை, இலவச சீருடை, குடிசைகள காங்கிரீட் வீடா மாத்துற திட்டம், திருமண உதவி 25 ஆயிரத்துல இருந்து ரூ.30 ஆயிரம், கர்ப்பிணிக்கு உதவித் தொகை ரூ.6 ஆயிரத்துல இருந்து ரூ.10 ஆயிரம் இப்படி ஏராளமான திட்டங்கள கலைஞர் அய்யா செய்திருக்கிறார்.
இந்தியாவிலேயே அருமையான மாநிலமா நம்ம தமிழ்நாடு வந்திருக்கு. கருப்பு எம்ஜிஆர் ஒருத்தர் இருக்காரு. அவரு மனைவி உலக அரசியல் பேசுது. அந்த அம்மா கையில கிளவுஸ் போட்டிருக்கு. ஏன்னா குழந்தைகள தூக்கினா ஏதோ இன்பெக்ஷன் ஆயிடுமாம்.
கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம். கடமை இருந்தால் வீரன் ஆகலாம். பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம். இந்த மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்... இந்த மூணும் உங்கிட்ட இருக்கா?
கலைஞர்கிட்ட இருக்கு, எம்.ஜி.ஆர் கிட்ட இருந்துச்சு. நீ டம்மி பீசு. உனக்கு எதுக்கு 41 சீட்டு. நான் எங்கேயும் சொல்லாத ரகசியத்த இங்க சொல்றேன். உனக்கு சீட்டு வேணுமான்னு எங்கிட்ட கலைஞர் கேட்டாரு. நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். நீ அரசியல்ல எல்கேஜி. கலைஞர் அய்யா 100 காலேஜுக்கு சமம்.
நீ என்னய பார்த்து அசிங்கமா பேசுற. நீ எங்க போனாலும் உன்ன விடமாட்டேன். புழுதிய கிளப்பிக்கிட்டு இந்தப்புயல் வந்துக்கிட்டே இருக்கும். நீ என்ன கட்சியா நடத்துற. கடை நடத்துற. அவருக்கு யாராவது ஓட்டு போட்டீங்கன்னா பழைய சோத்துக்கு ஊறுகாய் வாங்ககூட காசு இருக்காது.
கலைஞர் அய்யா குழந்தைகளுக்கு சத்துணவுல ‘எக்’ (முட்டை) போடுறாரு. நீ எந்த நேரமும் நல்லா ‘பெக்’ போடுற. பெக் அடிச்சுப்புட்டு கிக்கா, மக்கா இருக்கியே. திமுக தலைவர் கலைஞர் கிங் மேக்கர், எதிரணியில் உள்ளவர் டின் மேக்கர். அவரது அரசியல் அனுபவம் கூட உனது வயது இல்லை. திமுக தலைவர் சொந்த ஊரில் போட்டியிடுகிறார். அதுபோல நீ உனது சொந்த ஊரான மதுரையில் போட்டியிட வேண்டியது தானே. இவ்வாறு வடிவேவலு பேசினார்.

No comments:
Post a Comment