தனது கட்சி வேட்பாளரை விஜய்காந்த் அடித்துள்ளாரே என்ற கேள்விக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பதிலளிக்க மறுத்துவிட்டார்.
போயஸ் கார்டனில் இருந்து ஜோலார்பேட்டைக்கு பிரசாரம் செய்ய செல்லும் முன் நிருபர்களுக்கு ஜெயலலிதா அளித்த பேட்டி:
கேள்வி-உங்களது 7 நாள் பிரசார பயணம் எப்படி இருந்தது?
பதில்-அதிமுக கூட்டணி தலைவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் வெள்ளம் போல் மக்கள் திரண்டு வருகிறார்கள். நல்லாட்சி மலர மக்கள் ஆர்வத்தோடு ஆதரவு தருகிறார்கள்.
கேள்வி-மக்கள் மனநிலை எப்படி உள்ளது?
பதில்-கடந்த 5 ஆண்டுகளில் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
கேள்வி-தனது கட்சி வேட்பாளரையே விஜயகாந்த் அடித்துள்ளாரே?
பதிலளிக்க ஜெயலலிதா மறுத்துவிட்டார்
கேள்வி-ஏன் விஜய்காந்த் உள்ளிட்ட உங்கள் கூட்டணிக் கட்சியினருடன் சேர்ந்து நீங்கள் பிரச்சாரம் செய்யவில்லை?
பதில்-சட்டமன்ற தேர்தலில் 40 நாட்கள் பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தேன். ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் சேர்ந்து கூட்டு பிரசாரம் செய்ய நேரமில்லை.

No comments:
Post a Comment