விடிந்தால் எல்லாம் மறந்து போச்சு என்ற நிலையில் இருப்பவர் விஜயகாந்த் என, முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
நெய்வேலி பாமக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,
தமிழ்நாட்டில் தற்போது ஒரு பெரிய அலை வீசிக்கொண்டிருக்கிறது. அது என்ன அலை என்றால் கலைஞரின் சாதனை அலை. அந்த அலையால் கலைஞர் 6வது முறையாகவும் தமிழக முதல் அமைச்சராகுவது முடிவாகி விட்டது. இந்த தொகுதியிலும் பாமக வேட்பாளர் வெற்றி பெறுவார்.
எதிரணியில் இருக்கும் கூட்டணி கோடம்பாக்கத்தில் படம் எடுக்கும் சினிமா கூட்டணி. அதில் உள்ள விஜயகாந்த் விடிந்தால் எல்லாம் மறந்து போச்சு என்ற நிலையில் இருப்பவர். சொன்னதை எதுவுமே செய்யாதவர் ஜெயலலிதா. அவர் ஒன்று மட்டுமே செய்தார்.
கலைஞர் ஆட்சியில் விவசாயிகளுக்காக கொண்டு வந்த இலவச மின்சாரத்தை ரத்து செய்தார். கலைஞர் மீண்டும் ஆட்சிப் பொறுப்பு ஏற்றதும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை வழங்கி அவர்களின் 7 ஆயிரம் கோடி ரூபாய் கடனையும் தள்ளுபடி செய்தார். கலைஞர் ஆட்சி சாதனைகளை சொல்லிக்கொண்டே போகலாம் என்றார்.

No comments:
Post a Comment