நமது நாட்டில் முதல் முறையாக டெல்லியில் உள்ள திகார் சிறையில் உடல்களை பரிசோதிக்கும் ஸ்கானிங் கருவி பொருத்தப்பட உள்ளது. இந்த கருவி சுமார் ரூ. 3 கோடி செலவில் பொருத்தப்பட உள்ளது. இந்த ஸ்கானிங் கருவியின் மூலம் போதை பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் மொபைல் ஆகியவைகள் கண்காணிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இப்போதுள்ள முறைப்படி இவைகளை கண்காணிக்க சிரமமாக இருக்கிறது. தற்போது இந்த சோதனை இரண்டு முறை வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment