ஏ.ஆர். ரகுமானின் 'ஜெய்ஹோ' பாடலுக்கு பிறகு தனுசின் 'கொலை வெறிடி' பாடல் உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது. இந்த மெட்டுக்கு அவரவர் மொழிகளில் பாடல்களை உருவாக்கியும் பாடி வருகின்றனர்.
குறிப்பாக இளைஞர்களை கொலை வெறி பாட்டு வெகுவாக கவர்ந்துள்ளது. எனவே 'ஜெய்ஹோ' பாடலை பாராளுமன்ற தேர்தலில் பயன்படுத்தியது போல் 'கொலை வெறி' பாட்டை உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இதற்கான உரிமையை வாங்க நடிகர் தனுசுடன் காங்கிரஸ் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வடக்கே உள்ள இந்தி பத்திரிகைகளில் செய்தி வெளியாகி உள்ளது.
முதலில் இப்பாடலுக்கான உரிமையை வழங்க தனுஷ் மறுத்ததாகவும் பின்னர் ராஜ்பப்பர் எம்.பி. தனுசுடன் பேச்சு நடத்தி சம்மதிக்க வைத்ததாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது. தனுசிடம் இது குறித்து கேட்டபோது, அதுபோன்று முயற்சி நடப்பது எதுவும் தெரியாது. இது எனக்கு வெறும் செய்திதான் என்றார்.
சோனி நிறுவனத்திடம்தான் 'கொலை வெறி' பாடல் உரிமை உள்ளது. அவர்களுடன் பேசினார்களா? என்பது தெரியாது என்றும் அவர் கூறினார். அரசியல் கட்சி தேர்தல் பிரசாரத்தில் 'கொலை வெறி' பாட்டை பயன்படுத்துவதில் உங்களுக்கு உடன்பாடுதானா? என்று தனுசிடம் கேட்டபோது, அது அரசியல் பாட்டு அல்ல என்று பதில் அளித்தார்.
'ஜெய்ஹோ' பாடலை ராகுல்காந்தியை முன்னிறுத்த பயன்படுத்தினர். 'கொலை வெறி' பாட்டில் நல்லாட்சி, மதசார்பின்மை போன்றவற்றை வலியுறுத்த உள்ளனர். அதற்கான பொருத்த மான வார்த்தைகளை 'கொலை வெறி' மெட்டில் பயன்படுத்துகின்றனர்.
No comments:
Post a Comment