தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த ஆண்டு ஜுன் மாதம் 5-ம் தேதி நடத்தப்பட்ட குரூப் 1 முதன்மை நிலை தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. தேர்வு முடிவுகளை இங்கு பார்க்கவும்.
துணை கலெக்டர், டிஎஸ்பி உள்ளிட்ட 131 பதவிகளுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு கடந்த ஆண்டு ஜூன் 5ம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் மாநில அரசு மூலம் தேர்வு செய்யப்படும் உயர் பதவிகளான துணை கலெக்டர், டிஎஸ்பி உள்ளிட்ட பணிகளுக்கான குரூப் 1 தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைம் நடத்தி வருகிறது.
துணை கலெக்டர் - 56, டிஎஸ்பி - 29, உதவி வணிக வரி அலுவலர் - 28, மாவட்ட பதிவாளர் - 7, ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் - 10, கோட்ட தீயணைப்பு அலுவலர் - 1 ஆகிய 131 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் பேர் எழுதியிருந்தனர்.
இந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் ஜுலை மாதம் 28 மற்றும் 29ம் தேதிகளில் சென்னையில் நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள் குறித்த விவரங்கள் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தனித்தனியாக அனுப்பி வைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கூறியுள்ளது.
இந்த முடிவுகள் வெளியானதால் தேர்வு எழுதிய மாணவர்கள் ஆர்வத்துடன் தங்களது தேர்வு முடிவைக் காண டிஎன்பிஎஸ்சி-யின் அதிகார பூர்வ இணையதளத்தை நாடி வருகின்றனர்.

No comments:
Post a Comment