நடிகர் ஜெயம் ரவி இயக்குனர் அமீர் இயக்கத்தில் ’ஆதிபகவன்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆதிபகவன் படப்பிடிப்பை அமீர் இடைவெளிவிட்டு துவங்கினாலும் விரைவாக முடித்துவிட்டார்.
ஆதிபகவன் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்துவிட்ட நிலையில் அடுத்ததாக ஜெயம் ரவி ‘பூலோகம்’ படத்திலும் சமுத்திரக்கனி படத்திலும் நடிக்கிறார். பூலோகம் படத்தில் ‘கிக் பாக்ஸர்’-ஆக்வும், சமுத்திரக்கனி படத்திலும சவாலான கதாபாத்திரத்தில் நடிப்பதாலும் தனது உடல் மற்றும் மேக்-அப் சம்பந்தமான சில யோசனைகளை கமல்ஹாசனிடம் கேட்கப்போகிறாராம்.
இத்தனி வயதிலும் தன் உடலை நன்றாக பராமரித்து வரும் கமலின் யோசனைகள் தனக்கு கண்டிப்பாக பயனளிக்கும் என்பது ஜெயம் ரவியின் நம்பிக்கையாம்.
கமல் தனது விஸ்வரூபம் படத்தின் கடைசிகட்ட வேலைகளுக்காக வெளிநாட்டில் உள்ளார். கமல் சென்னை வந்ததும் அவரை சந்திக்க இருப்பதாக ஜெயம் ரவி கூறியுள்ளார்.

No comments:
Post a Comment