முதியோர்களுக்கு மாதம் 200 ரூபாய் ஓய்வுதியம் வழங்குவது என்பது அவர்களை அவமானப்படுத்தும் செயல் என விமர்சித்த கிராமப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் இத்தொகையை உயர்த்தி தர வேண்டுமென பிரதமரை கேட்டுக்கொண்டார்.
60 வயதிற்கு மேற்பட்ட சுமார் மூன்று கோடி ஏழை முதியோர்களுக்கு மாதம் 200 ரூபாய் ஓய்வூதியம் இந்திரா காந்தி தேசிய முதியோர் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்திருந்தார். இந்நிலையில், இத்தொகை முதியோர்களை இழிவுபடுத்தும் விதமாக இருக்கிறது என்றும் இதை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென கடந்த மே 16 ம் தேதி பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் ஜெயராம் ரமேஷ் தெரிவித்திருந்தார்.
சில நாட்களுக்கு முன் ஓய்வூதிய திட்ட கன்வீனர் பரிஷத் பாபா அத்தவ் மற்றும் அருணா ராய் போன்றோர்களை ஜெய்ராம் ரமேஷ் சந்தித்து பேசினார்.
அப்போது பரிஷத் இத்திட்டத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் என்ற வறைமுறையை நீக்க வேண்டும், 200 ரூபாயிலிருந்து 300 ரூபாயாக ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும், வயது வரம்பு 60 லிருந்து ஆண்களுக்கு 55 என்றும் பெண்களுக்கு 50 என்றும் குறைக்கவேண்டும் என்கிற கருத்தை தானும் ஏற்றுகொள்வதாக தெரிவித்தார்.
No comments:
Post a Comment