குடியரசுத்தலைவர் தேர்தல் ஜாதி, மதம் கடந்ததாக இருக்கவேண்டும் என பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களுள் ஒருவரான ராஜ்நாத் சிங் தெரிவித்தார். மேலும் ஆளும் காங்கிரஸ் கட்சி அனைத்து அரசியல் கட்சிகளும் ஏற்றுகொள்ளும் ஒருவரை குடியரசுத்தலைவருக்கான வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
குடியரசுத்தலைவர் பதவி என்பது அரசியல் சாசனத்தில் மிக உயர்ந்த பதவி எனவும், அதனால் குடியரசு தலைவர் தேர்தலில் ஆளும் கட்சியும் எதிர்கட்சிகளும் ஏற்றுக்கொள்ளும் வகையில் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் எனவும், இதில் ஜாதி, மதத்திற்கு இடமில்லை எனவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரணாப் முகர்ஜி குடியரசுதலைவருக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் ஆதரிப்பீர்களா என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த ராஜ் நாத் சிங் முதலில் காங்கிரஸ் தன் வேட்பாளரை அறிவிக்கட்டும் என்று கூறினார்.
No comments:
Post a Comment