உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ நகரில் கடந்த மே 11-ம் தேதி துவங்கியது. இப்போட்டியில் இந்திய செஸ் வீரரும், நடப்பு உலக சாம்பியனுமான விஸ்வநாதன் ஆனந்தும் இஸ்ரேலைச் சேர்ந்த போரிஸ் கெல்பாண்டும் விளையாடி வருகின்றனர்.
இப்போட்டியில் முதல் ஆறு சுற்றுகளும் டிராவில் முடிவடைந்தன. நேற்றைய முன்தினம் நடைபெற்ற 7-வது சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த் 32-வது நகர்த்தலிலேயே அதிர்ச்சித் தோல்வியைத் தழுவினார். இன்று எட்டாவது சுற்று ஆட்டம் நடைபெற்றது. இதில் 17-வது நகர்த்தலிலேயே கெல்பாண்டை வீழ்த்தி இப்போட்டியில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார்.
இன்னும் நான்கு சுற்று ஆட்டங்கள் நடைபெற இருக்கின்றன. இதில் யார் அதிக புள்ளிகளைப் பெறுகிறார்களோ அவர்களே இந்த ஆண்டின் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்வார். இந்த நான்கு சுற்றுகளும் டிராவில் முடிந்தால் மே 30-ம் தேதி டை பிரேக்கிங் ஆட்டம் நடைபெறும்.
தற்போது இருவரும் தலா 4 புள்ளிகளோடு சமநிலையில் உள்ளனர்.
No comments:
Post a Comment