புதுக்கோட்டை இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடாது என்றும், விஜயகாந்த் ஆதரவு கேட்டால் காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்யும் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறினார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில், புதுக்கோட்டை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடாது. இந்தத் தொகுதி எங்கள் கூட்டணி கட்சியான தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டதாகும். தி.மு.க. புதுக்கோட்டை இடைத்தேர்தலில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளனர். எனவே காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை என்ற முடிவை எடுத்துள்ளது.
இடைத்தேர்தலில் தே.மு.தி.கவுக்கு ஆதரவு அளிக்கும் நிலையை இப்போது எடுக்கவில்லை. விஜயகாந்த் ஆதரவு கேட்கிறாரா இல்லையா என்பது தெரியவிலை. எனவே இதுபற்றி முடிவு உயர் மட்டத்தில்தான் எடுக்கப்படும். விஜயகாந்த் ஆதரவு கேட்டால், காங்கிரஸ் மேலிடதான் முடிவு செய்யும். என்ன முடிவு எடுக்கிறார்களோ அதை தமிழக காங்கிரஸ் நிறைவேற்றும்.
மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று குறைசொல்வதை தமிழக அரசு தவிர்க்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் இருந்து தனி ஈழம் என்று குரல் வர வர ராஜபக்சே பயப்படுகிறார். தமிழர் பகுதியில் ராணுவத்தை முழுமையாக வாபஸ் பெற வேண்டும் என்பதில் மத்திய அரசு தீர்மானமாக உள்ளது. ஒன்றுபட்ட இலங்கையில்தான் தமிழர்களுக்கு வாழ்வு உண்டு என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆகவே தனி ஈழத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை.
டெசோ அமைப்பு உருவாக்கப்பட்டதால் தி.மு.க- காங்கிரஸ் உறவுவில் எந்த சிக்கலும் வராது என்றார்.
No comments:
Post a Comment