காங்கிரஸ் மூத்த தலைவர் என்.டி. திவாரிக்கு எதிராக இளைஞர் ஒருவர் வாரிசு உரிமை கோரி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதை உறுதிப்படுத்த, மரபணு சோதனை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டது.
புகார் கொடுத்த இளைஞர் மற்றும் அவரது தாயாரிடம் இருந்து ரத்த மாதிரி பெறப்பட்டது. ஆனால் என்.டி. திவாரி இதற்கு ஒத்துழைக்க மறுத்து வந்தார். இதனால் கோபம் அடைந்த டெல்லி ஐகோர்ட்டு, என்.டி. திவாரிக்கு கெடு விதித்து இன்று உத்தரவிட்டது.
வருகிற 26-ந்தேதி ரத்த மாதிரி கட்டாயம் அளித்தே ஆகவேண்டும் என என்.டி.திவாரிக்கு உத்தரவிட்டது.
No comments:
Post a Comment