பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால், பாரதீய ஜனதா வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. மத்தியில் ஆட்சி நடத்தி வரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி, அதை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கிறது. விலைவாசி உயர்வு, ஊழல்கள், கூட்டணியில் மோதல், மூத்த தலைவர்கள் மீது செக்ஸ் புகார் இப்படி பல்வேறு சிக்கல்களில் மாட்டிக் கொண்டுள்ளது.
இந்நிலையில், தற்போது மத்தியில் தேர்தல் நடந்தால் எந்த கூட்டணி வெற்றி பெறும் என்பதை அறிய, ஏ.பி.பி. நியூஸ்- ஏசி நீல்சன் நிறுவனம் கருத்துக்கணிப்பு நடத்தியது. நாடு முழுவதும் மொத்தம் 28 நகரங்களில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்த சர்வே மேற்கொள்ளப்பட்டது.
கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ள விவரங்கள் வருமாறு:-
பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பாரதீய ஜனதா ஆட்சியை பிடிக்கும். பெரிய அளவில் வெற்றி வித்தியாசம் இருக்காது. பாரதீய ஜனதாவுக்கு 28 சதவிகிதமும் காங்கிரசுக்கு 20 சதவிகிதமும் ஓட்டுக்கள் கிடைக்கும்.
கடந்த 2009-ல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தவர்கள் மீண்டும் அக்கட்சிக்கே வாக்களிக்க முடிவு செய்துள்ளனர். ஆனால், நடுநிலை வாக்காளர்களில் 31 சதவிகிதம் பேர், காங்கிரஸ் கட்சிக்கு எதிரான நிலையை எடுத்துள்ளனர். அவர்களில் 12 சதவிகிதத்தினர் பாரதீய ஜனதாவுக்கு ஓட்டுப் போட தீர்மானித்துள்ளனர்.
அதே சமயம், கடந்த தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு ஓட்டுப்போட்ட நடுநிலை வாக்காளர்களில் 2 சதவிதம் பேர் மட்டுமே இந்த முறை காங்கிரசுக்கு ஓட்டுப்போட இருப்பதாக கூறியுள்ளனர். மொத்தத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 8 சதவிகிதம் ஓட்டிழப்பு ஏற்படும். ஆனால், அந்தப் பலன் முழுமையாக பாரதீய ஜனதாவுக்கு போகாது.
ஒரு சதவிகிதம் மட்டுமே பாரதீய ஜனதாவுக்கு கிடைக்கும். மீதி ஓட்டுக்கள் மாநில கட்சிகளுக்கு செல்லும். பிரதமர் பதவிக்கு யார் வரவேண்டும்? என்ற கேள்விக்கு, குஜராத் முதல்- மந்திரி நரேந்திரமோடிக்கு 17 சதவிகிதம் பேரும், மன்மோகன் சிங்குக்கு 16 சதவீகிதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு நடந்த கருத்துக்கணிப்பில் நரேந்திர மோடிக்கு 12 சதவிகிதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்து இருந்தனர். கடந்த ஆண்டு சர்வேயில் மன்மோகன்சிங் 21 சதவிகிதம் ஆதரவை பெற்றிருந்தார். ராகுல் காந்திக்கு 19 சதவிகிதம் பேரும், சோனியாவுக்கு 14 சதவிகிதம் பேரும் ஆதரவாக கருத்து தெரிவித்து இருந்தனர்.
தற்போதைய கருத்துக் கணிப்பில் இவர்கள் இருவரின் செல்வாக்கு குறைந்துள்ளது. ராகுலுக்கு 13 சதவிகிதம் பேரும், சோனியாவுக்கு 9 சதவிகிதம் பேரும் வாக்களித்துள்ளனர். விலை உயர்வு, ஊழல் போன்ற விஷயங்கள் காங்கிரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி உள்ளன.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், உலக அரங்கில் இந்தியாவின் மரியாதையை சீர்குலைத்து விட்டதாக 54 சதவிகிதம் பேர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த ஊழலில் ப.சிதம்பரத்துக்கு பங்கு இருக்காது என்று 10 சதவீகிதம் பேர் மட்டுமே நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
எற்கனவே இந்த பி.ஜே.பி காரணுங்க டில்லி மாநகராட்சியில ஜெயிச்சத நெனைச்சுகிட்டு தல கால் தெரியாம கெடக்குறாணுங்க...இதுல நீங்கவேற கொம்பு சீவி விடரீங்களே தம்பி......மோடி பிரதமர் பதவிக்கு பொருத்தமான தலைவருதான் மக்கள் எல்லாம் நெனைக்குறாங்க உண்மைதான்...ஆனா சொந்த கட்சியைச்சேர்ந்த அத்வானி,சுஷ்மா, சொந்த கட்சிக்காரனுங்களுக்கே தெரியாத ஜேட்லி இவங்களுக்களுக்கே புடிக்கலியேப்பா.....அப்பா முருகா..!நீதாம்ப்பா!இந்த கட்சியையும், தேசத்தையும் காப்பாதணும்....
ReplyDelete