இலங்கையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் விடுதலைப் புலிகளை அழிப்பதாக கூறி சுமார் 1 1/2 லட்சம் ஈழத்தமிழர்களை சிங்கள ராணுவம் ஈவு, இரக்கமின்றி கொன்று குவித்தது. அதன்பிறகும் ரத்த வெறி அடங்காத ராஜபக்சேயும் அவரது தம்பிகளும் உத்தரவிட்டதின் பேரில் தஞ்சம் அடைந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இலங்கையில் நடந்த இந்த இனப்படுகொலை உலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்கள் மனதில் இன்னமும் நீறு பூத்த நெருப்பாக உள்ளது. உயிரிழந்த தமிழர்களுக்கு உலகின் பல நாடுகளிலும் தமிழர்கள் ஒன்று திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
ஆனால் இலங்கை வடக்கு கிழக்கு பகுதியில் உள்ள தமிழர்கள், தங்கள் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தகூட பயந்த நிலையில் உள்ளனர். இந்த நிலையில் முல்லைத்தீவு காட்டுக்குள் குண்டுவெடிப்புகளும் துப்பாக்கியால் சுடும் சத்தங்களும் கேட்டன.
இன்று அதிகாலை 5 மணியளவில் பரந்தன்-முல்லைத்தீவு நெடுஞ்சாலைக்கு சுமார் 12 கி.மீட்டர் வடக்கு கிழக்கே உள்ள காட்டுப்பகுதியில் ஒரு குண்டு சத்தம் கேட்டது. அத்துடன் சற்று நேரம் கழித்து தொடர்ந்து துப்பாக்கிகள் வெடிக்கும் சத்தம் அந்தப் பகுதியில் இருந்து கேட்டது.
துப்பாக்கி சூடு சத்தம் சுமார் 20 நிமிடங்கள் நீடித்தன. அதனைத் தொடர்ந்து சம்பவம் நடக்கும் இடம் நோக்கி படையினர் விரைந்தனர். சற்று நேரத்திற்கு பின்னர் இன்னுமொரு குண்டுவெடிப்பு சத்தம் நெடுஞ்சாலைக்கு மிக அருகாமையில் கேட்டது.
பின்பு அங்கு தொடர்ந்து கனரக துப்பாக்கி சத்தங்கள் கேட்டதாகவும் கொஞ்ச நேரத்துக்கு பின்னர் துப்பாக்கி சண்டை நடக்கும் சத்தங்கள் கேட்டு பிறகு ஓய்ந்ததாக அந்த பகுதியில் வாழும் ஒருவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment