நடப்பு ஐ.பி.எல் 5வது தொடரின் இறுதிக் கட்டத்தில் சர்ச்சை மேல் சர்ச்சை வெடித்து வருகிறது.. ஸ்பாட் பிக்சிங், ஷாருக்கான் ரகளை என இந்த வரிசையில் இடம்பிடித்திருக்கிறது ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் லூக்போமர்ஸ்பேச்சின் கைது நடவடிக்கை.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த லூக்போமர்ஸ்பேச் நடப்பு ஐ.பி.எல்.5வது தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார்
நேற்று டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடனான போட்டிக்குப் பிறகு விடுதிக்குச் சென்ற லூக்போமர்ஸ்பேச் விருந்து ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது அமெரிக்கப் பெண்ணிடம் லூக்போமர்ஸ்பேச் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தட்டிக் கேட்ட அவரது ஆண் நண்பரை அடித்ததாகவும் சொல்லப்படுகிறது. இதில் அப்பெண்ணும் அவரது நண்பரும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டனர்.
இதானால் லூக்போமர்ஸ்பேச் மீது டெல்லி போலீசில் அப்பெண் புகார் கொடுத்தார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த டெல்லி போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள ஐ.பி.எல். தலைவர் ராஜீவ் சுக்லா, ஐ.பி.எல் வீரர்களின் நடத்தைகளுக்கு எல்லாம் ஐ.பி.எல். நிர்வாகம் பொறுப்பாகாது என்று கூறியுள்ளார்.

No comments:
Post a Comment