லூக் போமெர்ஸ்பேக் சர்ச்சை இந்திய கிரிக்கெட்டில் ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகள் இப்போதைக்கு ஓயாது போலிருக்கிறது.
பணம், பெண்கள், கிரிமினல்தனம் என சகல ஒழுங்கின்மைகளின் இருப்பிடமாக கிரிக்கெட், குறிப்பாக ஐபிஎல் மாறியிருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த லூக் போமெர்ஸ்பேக் விவகாரம், இந்திய கிரிக்கெட் வீரர்கள் எப்படியெல்லாம் பெண்களுடன் உல்லாசமாக இருக்க அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதற்கு உதாரணமாக உள்ளது.
இரு தினங்களுக்கு முன் டெல்லி நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளார் போமெர்ஸ்பேக். இரவு மது விருந்தில் ஜோஹெல் ஹமித் என்ற பெண்ணிடம் இவர் தவறாக நடக்க முயன்றுள்ளார். அறைக்குள் நுழைந்து அந்தப் பெண்ணைக் கட்டிப் பிடித்து சில்மிஷம் செய்தாராம். போதையில் இருந்த அவரை ஜோஹெலின் காதலர் மும்பை மாடல் சேர்ந்த ஷகில் (இந்த ஷகிலின் சந்தேகத் தொடர்புகள் தனி கதை) தடுத்துள்ளார்.
ஆத்திரத்தில் போமர்ஸ்பேக் தாக்கியதில் படுகாயம் அடைந்த ஷகீல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விவகாரம் வெளியில் தெரிந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக போமர்ஸ்பேக் மீது அறைக்குள் அத்துமீறி நுழைந்தது, பாலியல் தொந்தரவு செய்தது, தாக்குதல் நடத்தியது போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்திய போது மயங்கி விழுந்ததால் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் வரை அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
இது முதல் முறையல்ல...
குற்றச்சாட்டுக்கு ஆளான போமர்ஸ்பேக்கை விசாரிக்க போலீசார் ஓட்டலுக்கு சென்ற போது குடிபோதையில் அருகில் 2 அரை நிர்வாண இளம்பெண்களுடன் செம ஜாலியாக இருந்துள்ளார் போமர்ஸ்பேக். அதை பார்த்ததும் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த 2007ம் ஆண்டு தெற்கு ஆஸி. அணிக்காக ஆடிய போது மதுவிருந்தில் கலந்து கொண்டு தாமதமாக வந்து சர்ச்சையில் சிக்கியவர்தான் இவர். அந்த குற்றத்துக்காக இவருடன் சேர்த்து ஷான் மார்ஷ் (இப்போது பஞ்சாப் அணிக்காக விளையாடுபவர்) தண்டிக்கப்பட்டார்.
2009ல் போதையில் கார் ஓட்டி போலீசில் சிக்கினார். அப்போது போலீசை தாக்கியதற்காக ரூ.5 லட்சம் அபாரதம் செலுத்தினார். அவரது லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களின் சூதாட்டம், ஷாருக்கான் மோதல் என அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் இந்திய கிரிக்கெட் வாரியத்தை உலுக்கியுள்ளன. இப்போது ஆஸ்திரேலிய வீரர் மீது செக்ஸ் புகார் எழுந்துள்ளதால் ஐபிஎல் போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

No comments:
Post a Comment