ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளவர்களில் ஆஸ்திரேலிய வீரர் லூக் போமெர்ஸ் பேச்சும் ஒருவர். டெல்லி நட்சத்திர ஓட்டலில் நடந்த மது விருந்தில் அமெரிக்க வாழ் இந்திய பெண் சொகைல் ஹமீதுவை லூக் மானபங்கப்படுத்த முயன்றார். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட லூக், நேற்றைய தினம் ஒருநாள் இடைக்கால ஜாமீனில் விடுதலை ஆனார்.
இந்நிலையில், அமெரிக்க பெண் லூக் மீது பாலியல் புகார் மனு அளித்திருந்தார். இந்த மனு இன்று பாட்டியாலா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித நீதிபதி, பாலியல் புகாருக்கு போதிய ஆதாரமில்லாததால் ஜாமீன் வழங்குவதாக உத்தரவிட்டார்.
மேலும், லூக் போமர்ஸ் பேச் இந்த வழக்கு முடியும் வரை இந்தியாவில் இருக்க வேண்டும் என்றும், லூக் தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க பெண் குறித்து பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் உரிமையாளர் சித்தார்த் மல்லையா தனது அணி வீரரான லூக்-க்கு ஆதரவாக தனது டுவிட்டர் இணைய தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். இவரது கருத்துக்கு தில்லியிலுள்ள மகளிர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

No comments:
Post a Comment