இலங்கை ராணுவ முன்னாள் தலைமை தளபதி சரத் பொன்சேகா. இவர் கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுடன் நடந்த இறுதிக்கட்ட போரை முன் நின்று நடத்தியவர். போர் முடிந்த பிறகு அதிபர் ராஜபக்சேவுடன் இவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
எனவே, இவர் பதவியில் இருந்து விலகி அரசியல்வாதி ஆனார். பின்னர் நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இதை தொடர்ந்து, இலங்கை அரசுக்கும், அதிபர் ராஜபக்சேவுக்கும் எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதாக ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். அவருக்கு 3 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே ராணுவத்தில் இருந்து தப்பி ஓடியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கைது செய்யப்பட்ட வழக்கில் சரத் பொன்சேகாவுக்கு கொழும்பு உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இதில் சட்ட நடைமுறைகள் முடிவதற்கு இரண்டு நாள் ஆனது. இதனையடுத்து வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து இன்று சரத் பொன்சேகா விடுதலையானார்.
பொன்சேகாவை அவரது ஆதரவாளர்களும், கட்சியினரும் கூட்டமாக வந்து வரவேற்றனர் என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment